keyboard
Alt+4 typing in Azhagi+ (in contrast to Alt+3 typing)
'w' என அடிக்க, 'ந்' கிடைக்கும்
ee-ஏ, oo-ஓ, wa-ந, etc.
Related pages: Alt+3 vs Alt+4, Motto, Your "non-monetary non-material" Contribution, Testimonials, Spread the News, All innovations free for all, The SELF
I created this page first on 05-Jul-2023, for convenience sake, since some users do not use Facebook. I created the contents below using the contents of this very beneficial post - https://www.facebook.com/groups/Azhagi/posts/4759169517455904/ - by loving Shri. Nithi Anand.
வணக்கம் நட்புகளே….. சமீபத்தில் என்னிடம் நண்பர் ஒருவர் எழுப்பிய கேள்வியையும் அதற்கு என்னுடைய பதிலையும் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
கேள்வி: சார்! நான் தமிழ் தட்டச்சிற்காக (Phonetic முறையில்) NHM தொகுப்பை பயன்படுத்துகிறேன். ஆனால் சமீபத்தில் அழகி+ மென்பொருளைப் பற்றி அறிந்துகொண்டேன். மேலும் அதை பயன்படுத்த விரும்புகிறேன். ஆனால், Phonetic தட்டச்சு முறையானது NHM ற்கும் அழகி க்கும் வேறுபடுமா? அதாவது, NHM இல், Phonetic முறையில் தட்டச்சு செய்யும்பொழுது, 'w' என அடிக்க எனக்கு 'ந்' கிடைக்கும். wa-ந, waa-நா, wi-நி, wii-நீ, etc. இது போலவே அழகியிலும் தட்டச்சு செய்ய முடியுமா?
பதில்: கண்டிப்பாக முடியும். Alt+3 shortcut key மூலம் இயங்கும் அழகியின் பிரத்தியேக 'Phonetic Transliteration' தட்டச்சு முறையும் NHMஇன் 'Phonetic' தட்டச்சு முறையும் ஒரு சில இடங்களில் (w, oo, ee) வேறுபடும் என்பது சரியே. உதாரணத்திற்கு, அழகியில் n/nh-ந், na/nha-ந, naa/nhaa-நா, etc.
ஆனால், NHMஇன் phonetic முறையிலும் (wa-ந, oo-ஓ, ee-ஏ, etc.) அப்படியே மாறாமல் அழகியில் தட்டச்சு செய்ய வழியுள்ளது. ஆமாம். அழகி+ ஐ இயக்கிய பின் KeyboardLayout இல் UserDefinedPhonetics1 என்பதே NHM phonetic முறையில் தட்டச்சு செய்வதாகும். அதற்கான default shortcut key Alt+4(ஆல்ட்+4) ஆகும். அதாவது, அழகி இயக்கத்தில் உள்ளபோது, நீங்கள் எந்த அப்ளிகேஷன் சென்றும், Alt+4 shortcut key அழுத்தி, NHM phonetic முறையிலேயே, நீங்கள் தாராளமாக தங்க்லீஷில் தட்டச்சு செய்து தமிழில் பெறலாம். ஒரு துளி பிரச்சினையும் இல்லை.
Alt+4 toggle key உங்களுக்கு ஏதுவாக இல்லையென்றால், நீங்கள் உங்களுக்கு விருப்பமான toggle keyற்கு (உ-ம்: F6, etc.) அதை நீங்களே மாற்றிக் கொள்ளலாம். அல்லது, அழகியின் Default Global Shortcut Key யான F10 (சில கணினிகளில் இது F11) ஐ பயன்படுத்தினாலும் சரியே. இங்கே ஒரு விஷயத்தை குறிப்பிடுகிறேன். NHM, e-Kalappai, தகடூர் எழுதி இம்மூன்றும் ஒரே வகை Phonetic தட்டச்சு முறையாகும். எனவே இப்பயனாளர்கள் எவ்வித சிரமமுமின்றி அழகி+ ஐ பயன்படுத்தி phonetic முறையில் தட்டச்சு செய்யலாம்.
அது மட்டுமில்லாமல், தட்டச்சு (அனைத்து தமிழ் எழுத்துருக்களிலும், எந்த ஒரு கீபோர்ட் லேஅவுட்-இலும் - Phonetic, TamilNet99, Tamil TypeWriter, etc.) தவிர, இன்னும் பற்பல அம்சங்கள் உள்ளன, அழகியில். அவற்றுள் சிலபல சிறப்பம்சங்களும், தனித்துவமான அம்சங்களும் (Unique & Special features - https://unique.azhagi.com) கூட அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அழகியை பயன்படுத்தி பயன்பல பெறுவோம்!
அழகியின் அம்சங்களை, சிறப்பம்சங்களை, தனித்துவமான அம்சங்களை, அனைவரிடமும் பகிர்வோம்!
நித்தி ஆனந்த்.
பிரான்ஸ்.
I created this page first on 05-Jul-2023, for convenience sake, since some users do not use Facebook. I created the contents below using the contents of this very beneficial post - https://www.facebook.com/groups/Azhagi/posts/4759169517455904/ - by loving Shri. Nithi Anand.
வணக்கம் நட்புகளே….. சமீபத்தில் என்னிடம் நண்பர் ஒருவர் எழுப்பிய கேள்வியையும் அதற்கு என்னுடைய பதிலையும் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.கேள்வி: சார்! நான் தமிழ் தட்டச்சிற்காக (Phonetic முறையில்) NHM தொகுப்பை பயன்படுத்துகிறேன். ஆனால் சமீபத்தில் அழகி+ மென்பொருளைப் பற்றி அறிந்துகொண்டேன். மேலும் அதை பயன்படுத்த விரும்புகிறேன். ஆனால், Phonetic தட்டச்சு முறையானது NHM ற்கும் அழகி க்கும் வேறுபடுமா? அதாவது, NHM இல், Phonetic முறையில் தட்டச்சு செய்யும்பொழுது, 'w' என அடிக்க எனக்கு 'ந்' கிடைக்கும். wa-ந, waa-நா, wi-நி, wii-நீ, etc. இது போலவே அழகியிலும் தட்டச்சு செய்ய முடியுமா?