azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 29 Nov 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 29 Nov 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

The shadows are many and varied, though the light is One. When the One is reflected in the many, in the multitude of jivis, it appears as the Self in each, which watches unaffected as the witness. The Atma (Divine Self) is Eternal. The Self is Truth. However, since it is enclosed in flesh, bone and skin, man deludes himself into believing that the outer covering and not the inner core is the source of bliss. The foremost duty of man to himself is therefore to penetrate through these sheaths and imbibe the higher bliss which his Atmic core alone can confer. Everyone must, in their own best interests, strive to attain that unifying principle that is their inner treasure. Of all Sadhanas (spiritual exercises) this is the most pertinent - the process of achieving this closeness. For, Sadhana means the endeavour and the effort to gain the desired object. Activities that are devoid of Truth do not deserve to be known as Sadhana. The Atma is the Universal Eternal Truth and therefore, it cannot be gained by search in the particularised and the temporary world. The Divine shines in your heart and can be won only therein. (Divine Discourse, Nov 23, 1984)
So long as one is dominated by sense pleasure, it cannot be said that their spiritual life has even started. - BABA
நிழல்கள் பல பல்வகையில், ஆனால் வெயில் ஒன்றே. திரளாக உள்ள ஜீவராசிகளில், ஏகத்துவமான திவ்யத்துவம் பிரதிபலிக்கும்பொழுது, அது, ஏதொன்றினாலும் பாதிக்கப்படாமல் சாட்சிபூதமாக விளங்கும் ஆத்மாவாக வெளிப்படுகிறது. ஆத்மா நித்தியமானது; சத்தியமானது. இருப்பினும், அது சதை, எலும்பு, தோல் ஆகியவற்றால் மூடப்பட்டிருப்பதால், உட்கருவில் அல்லாமல் உடலெனும் வெளிக்கூட்டில்தான் பேரானந்தம் உள்ளது என்று மனிதன் தவறாக நம்பி தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறான். எனவே, மனிதன் தனக்கே ஆற்ற வேண்டிய தலையாய கடமை என்னவென்றால், பொய்யான அந்த வெளிக்கூட்டினை, வெளி உறைகளை, குடைந்து கடந்து சென்று, அவனது அந்தராத்மா மட்டுமே அளிக்கக்கூடிய உயர்ந்த பேரானந்தத்தை உள்ளீர்த்து அதில் நிலைத்திருப்பதே. இப்படிப்பட்ட உட்பொக்கிஷமான ஏகத்துவத்தை அடைவதற்கு ஒவ்வொரு மனிதனும், தன் பெரும்நலன் கருதி, தீவிர ஆன்மிக சாதனையை மேற்கொள்ள வேண்டும். ஆத்மாவில் நிலைபெற மேற்கொள்ளப்படும் இந்த ஆன்மிக சாதனையே, இருக்கும் அனைத்து ஆன்மிக சாதனைகளிலும், அதிஏற்புடைய சாதனையாகும். ஏனெனில், சாதனை என்பது விரும்பிய பொருளை அடைவதற்காக ஒருவர் செய்ய வேண்டிய பெருமுயற்சி ஆகும். சத்தியமற்ற செயல்கள் ஆன்மிக சாதனை என்று அழைக்கத் தகுதியற்றவை. ஆத்மா என்பது அண்டமளாவிய நித்ய சத்தியம். எனவே, அதை உலகம் எனும் குறிப்பிட்ட மற்றும் நிலையற்ற ஒன்றில் அடையப் பெற இயலாது. உங்களுடைய உள் இதயத்தில்தான் திவ்யத்துவம் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது; அதனை அங்கிருந்துதான் அடையப்பெற முடியும். (தெய்வீக அருளுரை, நவம்பர்23, 1984)
ஒருவர் புலனின்பங்களின் ஆதிக்கத்தில் இருக்கும்வரை, அவருடைய ஆன்மிக வாழ்க்கை ஆரம்பித்து விட்டது என்று கூட கூற இயலாது. - பாபா