azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 27 Nov 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 27 Nov 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

The conflict between persons who accept God and deny Him, those who declare that God is found here or there and those who affirm He can be found nowhere, is never-ending! In this situation, remember that while it’s unnecessary to awaken a person already awake and easy to awaken a person who is asleep, we cannot awaken, however much we try, a person not wanting to awaken! Those who do not know can be taught through simple illustrations what they do not know. But those afflicted with half-knowledge and proud of that acquisition are beyond any further education! The two eyes give a picture of a vast expanse of space, but they cannot see the face to which they belong! They are important instruments of the body, but they cannot see the entire body. When you wish to see your face and back, you must keep one mirror in front and another behind you, so that in the front mirror you see the reflection of your back! So, too, when you desire to know your reality (face) and your future (back), you must adjust the mirror of 'Self-confidence' in front and mirror of Divine Grace behind you! Without these two, to affirm that you are aware of your Truth or of your destiny, is sheer fantasy. (Divine Discourse, Nov 23, 1976)
The fully blossomed flower is theism, the bud is atheism. Both are one. One is dormant, the other is awake. - BABA
இறைவன் 'இருக்கிறான், இல்லை', இறைவன் 'இங்குமங்குமிருக்கிறான், எங்குமே இல்லை' போன்ற வாதங்கள் முடிவே இல்லாமல் இருந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், நாம் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால், உறங்கிக் கொண்டிருக்கும் மனிதனை மிக எளிதாக நாம் எழுப்பி விடலாம்; கண் திறந்து இருப்பவனையோ எழுப்ப வேண்டிய அவசியமே இல்லை; ஆனால், உறக்கத்திலிருந்து மீள விருப்பமே இல்லாத ஒருவரை எத்தனைதான் முயன்றாலும் நம்மால் எழுப்ப முடியாது! அதேவிதமாக, தெரியாத மனிதர்களுக்கு, அவர்களுக்குத் தெரியாததை சில உதாரணங்களின் மூலம் மிக சுலபமாகப் புரியும்படி எடுத்துக் கூற முடியும்; போதிக்க முடியும். ஆனால், தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் அரைவேக்காடான (half-knowledged) மனிதர்கள், அதிலும் அப்படிப்பட்ட அரைகுறையான அறிவையும் கூட நினைத்து பெருமைப்பட்டுக்கொண்டிருக்கும் மனிதர்கள், எந்தவிதமமான போதனைக்கும் அப்பாற்பட்ட நிலையில் உள்ளார்கள். நாம் பெற்றிருக்கும் இரண்டு கண்களும் எல்லையற்ற பரந்த விண்வெளியையே நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன. ஆனால், அவற்றைத் தாங்கும் முகத்தையே அக்கண்களால் பார்க்க முடிவதில்லை! அவை உடலின் முக்கியமான கருவிகள்; இருந்தும், அந்த உடலையே அக்கண்களால் முழுமையாய்ப் பார்க்க முடியாது. நீங்கள் உங்கள் முகத்தையும் உங்களது பின்புறத்தையும் பார்க்க விரும்பினால், ஒரு கண்ணாடியை முன்னும், மற்றொரு கண்ணாடியை உங்கள் பின்னும் வைக்க வேண்டும். இதன் மூலம், முன்னே உள்ள கண்ணாடியில் உங்கள் பின்புறத்தின் பிரதிபலிப்பு தெரியும்! அதைப் போலவே, உங்களது முகம் எனும் யதார்த்த உண்மையையும் (Reality), முதுகு என்ற எதிர்காலத்தையும் நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால், நீங்கள் ‘தன்னம்பிக்கை’ என்ற கண்ணாடியை முன்னாலும், ‘இறை அருள்’ என்ற கண்ணாடியை பின்னாலும் பக்கபலங்களாக வைத்துக் கொள்ள வேண்டும்! இவை இரண்டும் இல்லாமல், உங்களைப் பற்றிய சத்தியத்தையோ (Truth) வாழ்க்கை வகுப்பமைவையோ (Destiny) நீங்கள் முற்றிலும் அறிந்தவர்கள் என்று சொல்லிக்கொள்வது வெறும் கற்பனையே! (தெய்வீக அருளுரை, நவம்பர்23, 1976)
முழுமையாக மலர்ந்த மலரே ஆத்திகம்; மலராத மொட்டே நாத்திகம். இரண்டும் ஒன்றே. ஒன்று உறங்கிக் கொண்டிருக்கிறது, மற்றொன்று விழித்திருக்கிறது. - பாபா