azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 24 Nov 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 24 Nov 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

Know that whatever you feel or do is an offering to God, that flows towards God. So, be cautious. Do not offer bad thoughts, words and deeds which He does not accept. Offer instead the holy and the pure. That’s your duty. That will ensure Self-satisfaction. Self-satisfaction paves the way to Self-sacrifice and Self-sacrifice brings about Self-Realisation. The entire process rests upon faith; Self-satisfaction, Self-sacrifice and Self-realisation - all these depend on faith. Faith decides the yearning; the yearning decides the fruit; and the act decides the stage that is reachable. For, the sincerity of the act promotes the purity of the path; the purity of the path determines the validity of the wisdom and true wisdom is Divinity itself. The act, the conduct, way of life - all these must be disciplined and elevated. How can a mind encumbered with desires ever rest content? How can it welcome sacrifice? Hence, one must involve themselves only in acts that encourage detachment and renunciation! (Divine Discourse, Nov 23, 1984)
One filled with Divine Love will be fearless, will seek nothing from others, and will be spontaneous and selfless in expressing one’s love. - BABA
நீங்கள் எதை எண்ணினாலும், செய்தாலும், அது இறைவனையே சென்றடைகிறது. ஆகவே கவனமாக இருங்கள். தீயவற்றை இறைவனுக்கு அர்ப்பணம் செய்வதை விட, உத்தமமான, பவித்ரமான, சுத்தமான, நித்யமான, சத்தியமான உணர்வுகளை இறைவனுக்கு அர்ப்பணம் செய்வதே ஒவ்வொரு மனிதனின் பிரதான கடமையாகும். இதுவே Self-Satisfaction – ஆத்ம திருப்தியாகும். ஆத்ம திருப்தி கிட்டிய பிறகே Self-sacrifice எனும் ஆத்ம தியாகம் கிடைக்கிறது. தியாகத்திற்கு சித்தமாக இருக்கும்போது Self-Realisation எனும் ஆத்ம சாக்ஷாத்காரம் கிட்டுகிறது. திருப்தி, தியாகம், சாக்ஷாத்காரம் ஆகியவற்றுக்கு மூலாதாரமாக விளங்குவது நம்பிக்கை. நம்பிக்கையே இல்லாவிட்டால் திருப்தி கிடைக்காது. மனிதனுக்குப் பிரதானம் கர்மா. இந்தக் கர்மத்தைக் கடைப்பிடிப்பதன் மூலமே உபாஸனை கிட்டுகிறது. உபாஸனையினால் ஞானம் ஏற்படுகிறது. இந்த ஞானமே தெய்வத்துடனான ஐக்கிய உணர்வை அளிக்கிறது. எனவே, செய்யும் கர்மாவில் தியாக உணர்வுடன், சமத்துவத்துடன், யோகத்துவத்துடன் கூடிய செயல்களிலேயே நாம் பங்கேற்க வேண்டும். இயன்ற அளவிற்கு நம்முடைய ஆசைகளைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ஆசைகள் நிறைந்த ஒரு மனம் எப்படித்தான் என்றுதான் திருப்தியில் இருக்கும்? தியாகத்தை எப்படி அது வரவேற்கும்? எனவே, பற்றின்மையையும் தியாகத்தையும் ஊக்குவிக்கும் செயல்களில் மட்டுமே ஒருவர் ஈடுபட வேண்டும்! (தெய்வீக அருளுரை, நவம்பர்23, 1984)
தெய்வீக ப்ரேமை நிறைந்த ஒருவர் அச்சமற்றவராக இருப்பார், யாரிடமும் எதையும் யாசிக்க மாட்டார், தனது ப்ரேமையை வெளிப்படுத்துவதில் தன்னியல்பாகவும் தன்னலமற்றவராகவும் இருப்பார். - பாபா