azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 09 Nov 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 09 Nov 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

Why should you have fear or sorrow, with the Lord installed in the altar of your heart? Do you not know He is there, guarding you and guiding you? He is in all beings, at all times. Endeavour to remember this fact whatever you may be doing, whoever you may be contacting, in whatever manner. You will succeed in this, provided you do not give up the recitation of His Name. The griha (home) where the Name of the Lord is not heard is a guha (cave), and nothing more. As you enter it, as you leave it, while you are in it, perfume it, illumine it, purify it, with the Name. Light it as a lamp at dusk, welcome it at dawn, as you welcome the sun. That is the genuine Deepavali, the Festival of Lamps. (Divine Discourse, Oct 24, 1965)
Singing the Lord's name should become an exercise in mutual sharing of joy and holiness. - BABA
இறைவன் உங்களுடைய இதயமெனும் கோவிலில் குடியிருக்கும்போது உங்களுக்கு ஏன் அச்சமும் துயரமும்? அவன் அங்கிருந்து கொண்டு உங்களைக் காத்து வழிநடத்துகின்றான் என்பதை நீங்கள் அறியவில்லையா? அவன் அனைத்து உயிரினங்களிலும், எல்லாக் காலங்களிலும் இருக்கிறான். நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தாலும், யாருடன் இருந்தாலும், எந்த வகையிலாவது இந்த உண்மையை நினைவில் கொள்ள முயன்றிடுங்கள். நீங்கள் இறைநாமஸ்மரணையைக் கைவிடாமல் இருந்தால், இதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். இறைவனின் திருநாமம் ஒலிக்காத ‘க்ருஹம்’ (அதாவது, இல்லம்), ஒரு ‘குகை’யே. அன்றி, வேறு ஒன்றும் இல்லை. நீங்கள் அதனுள்ளே போகும்போதும் வரும்போதும், நீங்கள் அங்கு இருக்கும்போதும், இறைவனுடைய திருநாமத்தைக் கொண்டு அங்கு மணம் பரப்புங்கள், ஒளியூட்டுங்கள், தூய்மைப்படுத்துங்கள். அந்தி சாயும் நேரத்தில் அதை தீபமாக ஏற்றிடுங்கள், அதிகாலையில் ஆதவனை வரவேற்பதைப் போல அதனை வரவேற்றிடுங்கள். உண்மையில் அதுவே தீபங்களின் பண்டிகையான தீபாவளியாகும். (தெய்வீக அருளுரை, அக்டோபர்24, 1965)
இறைவனின் திருநாமத்தைப் பாடுவது, மகிழ்ச்சியையும் புனிதத்தையும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளும், ஒரு பயிற்சியாகவே மாற வேண்டும். - பாபா