azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 07 Nov 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 07 Nov 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

When man fails to use his attainments for the welfare of others, he becomes a Narakasura (hellish demon). In a competitive race for individual glory, he is only condemning himself. He spends billions to get to the Moon and bring rocks from its crust, instead of feeding millions who starve down below and promoting the prosperity of backward nations. Even the best of things can be misused by men. Ravana, Shisupala, Kamsa, and other demons in the Indian puranas (ancient legends) and epics had vast scholarship, enormous economic and military power and even immense yogic and occult skills won by years of austerity, and disciplined living. But, they could not earn one skill, the skill to suppress the ego, and so, they became too obstinate, too obstructive and too dangerous to be allowed to live and prosper. The lesson taught by the careers of Naraka and of Emperor Bali is that man should be the master of his ego if he is to succeed in the art of successful living. (Divine Discourse, Oct 25, 1973)
Let Compassion and Sacrifice be your two eyes; let Egolessness be your breath and Love be your tongue. Let Peace reverberate in your ears. - BABA
மனிதன் தனக்குக் கிடைத்தவை அனைத்தையும் பிறரது நலனுக்காகப் பயன்படுத்தத் தவறினால், அவன் ஒரு நரகாசுரனாகவே மாறி விடுகிறான். தனிமனிதப் புகழுக்கான போட்டிப் பந்தயத்தில், அவன் முடிவில் தன்னைத்தானே தண்டித்துக் கொள்ளவே செய்கிறான். இங்கே தான் வாழும் பூமியில் பட்டினியால் வாடும் கோடிக்கணக்கான மக்களின் பசியைப் போக்குவதற்கும் பின்தங்கிய நாடுகளின் வளமையை மேம்படுத்துவதற்கும் பணத்தைச் செலவழிப்பதை விடுத்து மேலே உள்ள சந்திரனை அடைவதற்கும், அதன் மேற்பரப்பிலிருந்து பாறைகளைக் கொண்டு வருவதற்கும் மனிதன் கோடிக்கணக்கில் செலவழிக்கிறான். சிறந்த விஷயங்களைக் கூட மனிதர்களால் தவறாகப் பயன்படுத்த இயலும். புராணங்களிலும், இதிகாசங்களிலும் காணப்படும் ராவணன், சிசுபாலன், கம்சன் போன்ற பல அசுரர்கள், பல்லாண்டுகளாகச் செய்த கடுந்தவத்தின் பயனாக புத்தி பலம், தன பலம், புஜ பலம், யுத்த பலம் ஆகியவற்றையும், மந்திர சக்திகளையும் யோக சக்திகளையும் கைவரப் பெற்றிருந்தனர். ஆனால், அவர்களால் ஒரே ஒரு திறனை மட்டும் பெறவே முடியவில்லை; அதாவது தங்களுடைய அகந்தையை அடக்கும் திறன். அதனால், அவர்கள் மிகவும் மூர்க்கத்தனமானவர்களாகவும், துன்புறுத்துபவர்களாகவும், பயங்கரமானவர்களாகவும் மாறியதால் அவர்களை உயிர்வாழ்ந்து செழிக்க விடாமல் வதம் செய்ய வேண்டியிருந்தது. எனவே வெற்றிகரமான வாழ்க்கை வாழ வேண்டுமென்றால், மனிதன் தன் அகந்தையை அடக்கி ஆளவேண்டும் என்பதே நரகாசுரன், பலிச்சக்கரவர்த்தி போன்றோர் வாழ்ந்த விதம் நமக்குக் கற்பிக்கும் பாடமாகும். (தெய்வீக அருளுரை, அக்டோபர்25, 197)
தயையும் தியாகமும் உங்களது இரு கண்களாக இருக்கட்டும்; அகந்தையின்மை உங்களுடைய உயிர் மூச்சாகவும், ப்ரேமை உங்களுடைய வாக்காகவும் இருக்கட்டும்; உங்களுடைய செவிகளில் சாந்தி முழங்கட்டும். - பாபா