azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 03 Nov 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 03 Nov 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

The ideal is to make your hearts temples for the Divine to dwell. But this is not possible for everybody. Temples in stone are reminders of the existence of God. When you see a lawyer you are reminded of your legal troubles. When you see a doctor you think of your illness. Likewise, when you see a temple, you are reminded of God. Temples are useful only as reminders. But true worship consists in heartfelt devotion to the God within each one. Purifying this temple of your heart, you must dedicate your life to service. It is such dedicated service, done in the spirit of sadhana, which distinguishes Sathya Sai Organisations. Innumerable Sai devotees, men and women, young and old, are rendering service in various forms out of their love for Sai. People talk about Swami’s vibhuti (sacred ash) and Swami's miracles. But the real miracle is Swami's boundless love. It is this love which is inspiring countless devotees to engage themselves in selfless service! (Divine Discourse, Apr 06, 1983)
Remember, the persons whom you serve are temples where God is installed. Worship them with the flowers of good words, timely help, and vigilant care. - BABA
உங்கள் இதயங்களை இறைவன் உறையும் ஆலயங்களாக ஆக்குவதுதான் இலட்சியமாக இருக்க வேண்டும். ஆனால் இது அனைவருக்கும் சாத்தியமில்லை. கல்லால் ஆன கோயில்கள் இறைவன் இருப்பதை நினைவூட்டுகின்றன. ஒரு வழக்கறிஞரைப் பார்க்கும்போது உங்களுடைய வழக்குகள் நினைவுக்கு வருகின்றன. நீங்கள் ஒரு மருத்துவரைப் பார்க்கும்போது உங்கள் நோயைப் பற்றி நினைக்கிறீர்கள். அதைப்போல ஒரு கோவிலைக் கண்டால் இறைவன் நினைவுக்கு வருகிறான். கோயில்கள் நினைவூட்டுவதற்காகவே பயன்படுகின்றன. ஆனால் உண்மையான வழிபாடு என்பது ஒவ்வொருவரிடமும் உள்ள இறைவன் மீதான இதயபூர்வமான பக்தியே. உங்கள் இதயமெனும் கோயிலைத் தூய்மைப்படுத்தி, உங்கள் வாழ்க்கையை சேவைக்காகவே அர்ப்பணிக்க வேண்டும். ஆன்மிக சாதனையாக ஆற்றப்படும் இப்படிப்பட்ட அர்ப்பணிப்புணர்வு கொண்ட சேவையே சத்ய சாயி நிறுவனங்களை வேறுபடுத்தி தனிச்சிறப்புடன் காட்டுகிறது. எண்ணற்ற சாயி பக்தர்கள், ஆண்கள், பெண்கள், சிறியவர், பெரியவர் என, சாயி மீதுள்ள அன்பினால் பல்வேறு விதங்களில் சேவை செய்து வருகின்றனர். மக்கள், ஸ்வாமி சிருஷ்டிக்கும் விபூதியைப் பற்றியும், ஸ்வாமியின் அற்புதங்களைப் பற்றியும் பேசுகிறார்கள். ஆனால் உண்மையான அற்புதம் ஸ்வாமியின் அளவற்ற ப்ரேமையே. இந்த ப்ரேமையே எண்ணற்ற பக்தர்களை தன்னலமற்ற சேவையில் ஈடுபடத் தூண்டுகிறது! (தெய்வீக அருளுரை, ஏப்ரல்06, 1983)
நீங்கள் சேவை செய்யும் நபர்கள் இறைவன் உறையும் ஆலயங்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இனிய வார்த்தைகள், சரியான நேரத்தில் உதவி, மிகுந்த அக்கறை ஆகிய மலர்களால் அவர்களை ஆராதனை செய்யுங்கள். - பாபா