azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 23 Oct 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 23 Oct 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

Saraswati is the presiding deity of speech and wisdom. Gayatri Mantra begins with "Om Bhur Bhuvah Suvah”. Bhuh means materialisation. It represents matter, which is subject to change. Bhuvah represents life principle, vibration. Savitri is the presiding deity of the life principle. You must have heard the story of Savitri, who restored her dead husband back to life with the power of her devotion and surrender. Saraswati is worshipped as Jnana Devata, since she confers good intellect and wisdom. This is described in Vedas as Prajnanam Brahma. Prajnana does not mean worldly knowledge. It is Constant Integrated Awareness, which is changeless and eternal. The divine mother has three names: Gayatri, Savitri, and Saraswati. Gayantam trayate iti Gayatri (Gayatri protects those who sing her glory). Gayatri, being the presiding deity of our senses, helps us to master the senses. Savitri, being the presiding deity of the life principle, protects our life. Saraswati bestows on us the changeless and eternal wisdom. (Divine Discourse, Oct 09, 2002)
Never give up the Gayatri Mantra. It will protect you from harm wherever you are - travelling, working or at home. - BABA
சரஸ்வதியே வாக்கிற்கும் ஞானத்திற்கும் அதிதேவதையாவாள். காயத்ரி மந்திரம், ‘ஓம் பூர் புவ: ஸ்வ:’ என்று தொடங்குகிறது. ‘பூர்’ என்றால் Materialisation - இது, மாறுதலுக்கு உட்பட்ட, பொருளைக் (Matter) குறிக்கிறது. இரண்டாவது ‘புவஹ’ என்பது Vibration - ப்ராண தத்துவத்தைக் குறிக்கிறது. சாவித்திரியே ப்ராண தத்துவத்தின் அதிதேவதை. சாவித்திரி தன் பக்தி மற்றும் சரணாகதியின் பலத்தால் இறந்த கணவனை உயிர்ப்பித்த கதையை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். மூன்றாவது, நற்புத்தியையும் ஞானத்தையும் அருளும் ஞானதேவதையான சரஸ்வதி. இந்த தேவதையைத்தான் ‘ப்ரக்ஞானம் பிரம்மா’ என்று வேதங்களில் வர்ணிக்கப்படுகிறது. ப்ரக்ஞானம் என்றால் வெறும் ஞானம் அல்ல. அது மாறாத, Constant Integrated Awareness எனும் நித்யமான நிலையான ஒருங்கிணைந்த விழிப்புணர்வாகும். தெய்வ அன்னைக்கு காயத்ரி, சாவித்திரி, சரஸ்வதி என்ற மூன்று பெயர்கள் உள்ளன. ‘காயந்தம் த்ராயதே இதி காயத்ரி’ – அதாவது, காயத்ரி தன்னைப் போற்றிப் பாடுபவர்களைக் காப்பவள். காயத்ரி புலன்களின் அதிதேவதையாக இருப்பதால், புலன்களைக் கட்டுப்படுத்த நமக்கு உதவுகிறாள். சாவித்திரி, ப்ராண தத்துவத்தின் அதிதேவதையாக இருப்பதால் நம் வாழ்க்கையைக் காத்து ரட்சிக்கிறாள். சரஸ்வதி மாறாத நித்ய ஞானத்தை நமக்கு அருள்பவள். (தெய்வீக அருளுரை, அக்டோபர்09, 2002)
காயத்ரி மந்திரத்தை ஒருபோதும் கைவிடாதீர்கள். நீங்கள் பயணத்திலோ, வேலையிலோ, வீட்டிலோ, எங்கிருந்தாலும் இது உங்களை தீங்கிலிருந்து காப்பாற்றும். - பாபா