azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 18 Oct 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 18 Oct 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

One individual may elect to worship the Divine in the form of his favourite goddess. Another may worship God in a different form and derive bliss from such worship. Each one should note that Forms in which Divine is worshipped by others are as important to them as their own chosen deity is to them. If, on the contrary, one criticises or casts a slur on deities worshipped by others, he is committing a grievous sin, however well he may be performing his own worship. Man should also show equal regard and reverence for the mothers of others as he shows for his own mother. There are several notable examples in daily life of the divine quality which motherhood represents. Cow converts its own blood into nourishing milk for man to sustain his body. The cow is the first example of Divine as Mother. Earth comes next. Like God, Earth bears man in its bosom and takes care of him in many ways. Hence Earth also is the embodiment of the Mother. (Divine Discourse, Oct 14, 1988)
It is the foremost duty of children to fulfil the wishes of their mother and make her happy. - BABA
ஒருவர் இறைவனைத் தன்னுடைய இஷ்ட தேவதையின் ரூபத்தில் ஆராதித்து வழிபடலாம். மற்றொருவர் தனது இஷ்ட தேவதையை வேறொரு ரூபத்தில் ஆராதித்து ஆனந்தப்படலாம். உன்னுடைய இஷ்ட தேவதையின் ஸ்வரூபம் உனக்கு எவ்வளவு முக்கியமோ, மற்றவர்களுக்கும் அவரவரது இஷ்ட தேவதைகள் அதே அளவு முக்கியம் என்ற சத்தியத்தை உணர வேண்டும். அவ்வாறு இல்லாமல், பிறரது இஷ்ட தேவதையின் ஆராதனையை விமர்சித்து ஆட்சேபிக்கும்போது, மனிதன் எத்தனை விதமான ஆராதனைகளைச் செய்தாலும், அவன் பாவத்திற்கு ஆளாகாமல் தப்ப முடியாது. தன்னுடைய தாயை எவ்வாறு தெய்வ ஸ்வரூபமாக ஆராதித்து, சேவித்து, அவரை ஆனந்தப்படுத்துவதைப் போலவே, மற்றவர்களும் தத்தமது தாயைக்கூட தெய்வமாக பாவித்து ஆராதித்து சேவிப்பதைக் கண்டு நாம் எவ்வளவோ திருப்தி அடைய வேண்டும். இன்று அன்றாட வாழ்க்கையில் சத்தியமான மாத்ரு தேவதையை கண்டுணர்வதற்கு அநேகவிதமான ஆதாரங்கள் இருக்கின்றன. பசு தனது இரத்தத்தைப் பாலாக மாற்றியளித்து, நாம் புஷ்டியான தேகத்தைப் பெற உதவுகிறது. எனவே தான் பசு நமக்கு பிரதானமான அன்னையாகும். அடுத்து வருவது பூமி. இறைவனைப் போலவே பூமியும் மனிதனைத் தன் மார்பில் தாங்கி, அவனை அநேகவிதங்களில் காத்து வருகிறது. எனவே பூமியும் நமக்கு பிரதானமான அன்னையாகும். (தெய்வீக அருளுரை, அக்டோபர்14, 1988)
தாயின் விருப்பங்களைப் பூர்த்தி செய்து, அவரை மகிழ்விப்பதே பிள்ளைகளின் தலையாய கடமையாகும். - பாபா