azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 07 Oct 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 07 Oct 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

One should have good thoughts. Desires originate from thoughts. These desires chain and bind. One’s willpower (ichchha shakti) also emerges from thoughts. This willpower is very important, like the life principle of humanity. All other powers like the power of intellect, of understanding, of determination, of speech, etc., come out of it. This willpower is like the king of all other powers. It will lead one to the sacred path if one makes proper use of it. On the contrary, if one makes improper use of willpower, one will become wicked. Willpower affects the thoughts, and thoughts influence willpower. Bad thoughts make willpower weak. Decline in willpower makes the desires stronger and stronger. Here is a small example. Suppose a man has the habit of drinking too much coffee or tea, smoking cigarettes, etc. His bad habits will certainly weaken his willpower. If he has 20 such bad habits, and if he gives up one habit after another, his willpower will become stronger and stronger. (Divine Discourse, Apr 07, 1993)
As you develop your willpower and reduce your desires, your power of discrimination will also increase. - BABA
ஒருவர் நல்ல எண்ணங்களைக் கொண்டிருக்க வேண்டும். ஆசைகள், எண்ணங்களிலிருந்து எழுகின்றன. இந்த ஆசைகள் ஒருவரைப் பிணைத்து, பந்தப்படுத்துகின்றன. ஒருவரின் இச்சா சக்தி எண்ணங்களிலிருந்தே வெளிப்படுகிறது. மனிதகுலத்திற்கு உயிர்மூச்சைப் போன்று இந்த மனத்திண்மையும் மிகவும் முக்கியமானது. இந்த மனத்திண்மை மற்ற எல்லா சக்திகளுக்கும் அரசனைப் போன்றது. அதைச் சரியாகப் பயன்படுத்தினால் அது ஒருவரைப் புனிதப் பாதையில் இட்டுச் செல்லும். மாறாக, ஒருவர் மனத்திண்மையை சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால் அவர் தீயவனாக ஆகிவிடுவார். மனத்திண்மை எண்ணங்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது, எண்ணங்கள் மனத்திண்மையின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தீய எண்ணங்கள் மனத்திண்மையை பலவீனப்படுத்தும். மனத்திண்மை குறைவது ஆசைகளை மேன்மேலும் பலப்படுத்துகிறது. இங்கே ஒரு சிறிய உதாரணம். ஒரு மனிதனுக்கு அதிகமாக காபி அல்லது டீ குடித்தல், புகைபிடித்தல் போன்ற பழக்கங்கள் உள்ளதாக வைத்துக் கொள்வோம். அவனது கெட்ட பழக்கங்கள் நிச்சயமாக அவனது மனத்திண்மையை பலவீனப்படுத்தும். இப்படி 20 கெட்ட பழக்கங்கள் இருந்தால், ஒன்றன்பின் ஒன்றாக அவற்றை விட்டுவிட்டால், அவனது மனத்திண்மை மேன்மேலும் வலுவடையும். (தெய்வீக அருளுரை, ஏப்ரல்07, 1993)
நீங்கள் உங்கள் மனத்திண்மையை வளர்த்துக்கொண்டு, ஆசைகளை குறைக்கும்போது, உங்கள் பகுத்தறியும் ஆற்றலும் அதிகரிக்கும்.