azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 30 Sep 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 30 Sep 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

'Live together, revere each other; let not the seeds of envy and hate grow and choke the clear stream of Love,' is the prayer that the ancient seers have taught the children. Their teaching has been: Unity Divinity Charity - in thought, word and deed, from the first breath to the last! When teachers transmit this heritage, in an unspoilt and undiminished manner to the children, the future of the land is assured to be glorious. Teachers should not trot out excuses, based on material considerations, to shirk or by-pass their essentially spiritual task of 'education’. They must bear trials and tribulations, with calm content, and do their work even more efficiently, so that God will reward them, and society will learn to revere them all the more! The world honours the man who suffers gladly, far more than the one who enjoys shamefacedly! (Divine Discourse Sep 05, 1968)
Peace can be attained only by those who, with patience, perseverance and forbearance follow the sacred path of spirituality. - BABA
‘கூடி வாழ்வோம், ஒருவரையொருவர் மதிப்போம்; பொறாமை மற்றும் வெறுப்பின் விதைகள் முளைத்து, தெள்ளிய அன்பின் ஓடை அடைபடுவதைத் தடுப்போம்" என்பதே பண்டைய ரிஷிகள் குழந்தைகளுக்குப் போதித்த பிரார்த்தனை. முதல் மூச்சிலிருந்து இறுதி வரை சிந்தனை, சொல் மற்றும் செயலில் Unity Divinity Charity - ஒற்றுமை, தெய்வீகம், அறம் ஆகியவை இருக்க வேண்டும் என்பதே அவர்களுடைய போதனையாகும்! ஆசிரியர்கள் இந்தப் பாரம்பரியத்தை குன்றாமல், குறையாமல் குழந்தைகளுக்கு எடுத்துச் செல்லும்போது, நாட்டின் எதிர்காலம் மகத்துவமிக்கதாக இருக்கும். ஆசிரியர்கள் பொருளைக் கருத்தில் கொண்டு, தங்கள் ஆன்மிகப் பணியான 'கல்வி'யை சாக்குப்போக்கு சொல்லி தட்டிக் கழிக்கவோ ஒதுக்கவோ கூடாது. அவர்கள் சோதனைகளையும் வேதனைகளையும் பொறுமையாகத் தாங்கிக்கொண்டு தங்கள் பணியை மேலும் திறம்படச் செய்ய வேண்டும்; இதனால் இறைவனின் அருளுக்குப் பாத்திரமாக முடியும், சமூகமும் அவர்களை மேலும் மதிப்பதற்குக் கற்றுக் கொள்ளும்! வெட்கமின்றி சுகத்தை அனுபவிப்பவனை விட, மகிழ்ச்சியுடன் துன்பத்தை ஏற்றுக்கொள்பவனை உலகம் அதிகமாகவே மதிக்கிறது! (தெய்வீக அருளுரை, செப்டம்பர்05, 1968)
பொறுமை, விடாமுயற்சி மற்றும் சகிப்புத்தன்மையுடன் புனித ஆன்மிகப் பாதையில் செல்பவர்களால் மட்டுமே சாந்தியை அடைய முடியும். - பாபா