azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 03 Sep 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 03 Sep 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

How can you become dear to God? Gita emphasises two qualifications: “Samtushtah Satatam” (ever contented) and “Dhruda nischayah” (with firm resolve). He must be contented and cheerful always, without regard for changing tides of fortune. It should not be a pose, a passing phase, an artificial, superficial show. Tushti has a prefix sam which indicates contentment must be deeply rooted in the heart and manifested through every thought and act. Another term for contentment is trupti; all-pervading never changing form of trupti is denoted by the prefix sam (sam-trupti). Samtushti fills the heart with divine delight; marks a stage of detachment from the world, for the world makes one swing from pain to pleasure and back again. The devotee therefore must desist from attempts to earn joy or avoid grief. He must be unconcerned with ups and downs. Success should not boost his ego, nor should defeat land him in dejection! Honours should not turn his head, nor dishonour make it droop. Equanimity and serenity - these are the signs of Samtushti. A devotee welcomes gratefully whatever happens to him as given to him by Divine Will, to which he has surrendered his own will! (Divine Discourse, Aug 02, 1986)
True renunciation consists in treating happiness and sorrow alike. – BABA
ஒருவன் இறைவனுக்குப் பிரியமானவனாக ஆவது எப்படி? அதற்கு பகவத் கீதை இரண்டு தகுதிகளை வலியுறுத்துகிறது: (1) ‘ஸம்துஷ்ட ஸததம்’ – அதாவது, எப்போதும் மனநிறைவுடன் இருப்பது, (2) ‘த்ருட நிஸ்ச்சயஹ’ - அதாவது திடமான மன உறுதி கொண்டிருப்பது. வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்படாமல் அவன் எப்போதும் மனநிறைவுடனும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும். இது ஒரு நடிப்பாக, தாற்காலிகமானதாக, செயற்கையாக, போலித்தனமாக இருக்கக்கூடாது. ‘துஷ்டி’ என்ற பதத்தின் முன் ‘ஸம்’ என்ற பதம் உள்ளது; இது, இதயத்தில் மனநிறைவு ஆழமாக வேரூன்றி, ஒவ்வொரு எண்ணம் மற்றும் செயலின் மூலம் வெளிப்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது. அடுத்து ‘ஸம்திருப்தி’. மனநிறைவு என்பதற்கு மற்றொரு சொல் ‘திருப்தி’; ‘திருப்தி என்ற பதத்தின் முன் உள்ள ‘ஸம்’ என்ற பதம், எங்கும் நிறைந்து, எப்போதும் மாறாமல் இருப்பதைக் குறிக்கிறது. இதயத்தை தெய்வ ஆனந்தத்தால் ‘ஸம்துஷ்டி’ நிரப்புகிறது; இது ஒருவரை இன்ப துன்பத்திற்கு இடையே ஊசலாடச் செய்யும் உலகத்தின் மீதுள்ள பற்றை விடுத்த நிலையைக் குறிக்கிறது. எனவே பக்தன் மகிழ்ச்சியைப் பெறுவதற்கும், துக்கத்தைத் தவிர்ப்பதற்குமான முயற்சிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். அவன் வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க வேண்டும். வெற்றியினால் அவனுடைய அகந்தை பெருகவோ, தோல்வியினால் அவன் துவண்டுவிடவோ கூடாது! மதிப்பு மரியாதைகளால் தலைக்கனம் ஏறாமலும், அவமரியாதையால் தலைகுனியாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். சாந்தியும் சமநிலையுமே ஸம்துஷ்டியின் அடையாளங்கள். தன் சங்கல்பத்தையே முற்றிலும் தெய்வத்திடம் ஒப்படைத்துவிட்ட நிலையில், ஒரு பக்தன் தனக்கு எது நேர்ந்தாலும், 'அது தெய்வ சங்கல்பத்தின்படியே நடக்கிறது' என்ற சரணாகத உணர்வுடன் அதை ஏற்றுக்கொள்கிறான்! (தெய்வீக அருளுரை, ஆகஸ்ட்02, 1986)
சுகதுக்கத்தை சமமாக பாவிப்பதே உண்மையான துறவுநிலையாகும். - பாபா