azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 24 Aug 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 24 Aug 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

Everything is based on man's thoughts, which find expression in external forms - a reflection of one’s inner being. This can be illustrated by a simple example. When one wants to build a house, he plans in advance how the different rooms should be located. These ideals are later incorporated in blue prints. The thoughts come first and then they are given concrete forms. Similarly when you want to write a letter, you first think of what you should write and then commence to write. Thoughts lead to action. There can be no action without sankalpas (firm thoughts). Hence, it is essential to entertain sacred thoughts. Everyone should realise that all the sorrows and miseries of modern man are due to his bad thoughts. Every man thinks that someone else is responsible for his troubles. This is not so. You alone are responsible for the good and evil that befalls you. You blame others because of your weakness. (Divine Discourse Aug 18, 1995)
To diminish the wanderings of your thoughts, repeat the name of the Lord; that will keep out your sorrows and troubles. – BABA
ஒவ்வொன்றும் மனிதனின் சங்கல்பத்துடனேயே சம்பந்தப்பட்டதாக உள்ளது; இந்த சங்கல்பத்தில் இருக்கும் ஒவ்வொரு பதமும் செயலாக வெளிப்படுகிறது; அந்தராத்மாவின் பிரதிபலிப்பே இவை. இதை ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் நீங்கள் புரிந்து கொள்ளலாம். நாம் ஒரு வீட்டைக் கட்டவேண்டும் என்றால், முன்னதாகவே, இந்த அறை இங்கே இருக்க வேண்டும், அந்த அறை அங்கே இருக்க வேண்டும், வராண்டா அங்கே இருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறோம்; அதன்படியே ஒரு காகிதத்தில் வீட்டின் வரைபடத்தை வரைந்து கொள்கிறோம். சங்கல்பங்கள் முதலில் வருகின்றன, அதன்படியே அவற்றை உருவகப்படுத்துகிறோம். அதைப் போலவே, நீங்கள் யாருக்காவது ஒரு கடிதம் எழுத வேண்டும் என்றால், நீங்கள் என்ன எழுதவேண்டும், எங்கு எழுதவேண்டும் என்பதை எல்லாம் தமக்குத் தாமே முதலில் சிந்தித்துக் கொண்டு, அதன் பின்னரே உங்களால் அந்தக் கடிதத்தை எழுத முடியும். எனவே, முதலில் சங்கல்பித்தல், இரண்டாவதே செயலாற்றல். சங்கல்பமின்றி செயலாற்ற இயலாது. எனவே, புனிதமான சங்கல்பங்களை அபிவிருத்தி செய்து கொள்ள வேண்டும். இன்றைய மனிதனின், துக்கங்கள், கவலைகள், கஷ்டங்கள், நஷ்டங்கள் ஆகியவற்றிற்கு அவரவர்களின் சங்கல்பங்களே மூலகாரணம் என்பதை ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து கொள்வது அத்தியாவசியம். தன்னுடைய கஷ்டங்களுக்கு வேறு எவரோ காரணம் என்று ஒவ்வொரு மனிதனும் எண்ணுகிறான். அப்படி இல்லவே இல்லை. உன்னுடைய நல்லவை கெட்டவைக்கு நீயேதான் காரணமே தவிர வேறு எவரும் இல்லை. உங்களுடைய பலவீனத்தின் காரணமாக நீங்கள் பிறர் மீது பழி சுமத்தி, அவர்களை நிந்தித்து, அவர்களுக்குத் தீங்கிழைக்க முனைகிறீர்கள். (தெய்வீக அருளுரை, ஆகஸ்ட்18, 1995)
உங்களுடைய சிந்தனைகள் அலைபாய்வதைக் குறைப்பதற்கு பகவந்நாமாவை உச்சரியுங்கள். அதனால் உங்கள் மனதில் துக்க வேதனைகளுக்கு இடமிருக்காது. - பாபா