azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 23 Aug 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 23 Aug 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

People believe that incarnations of God happen for only two reasons: punishment of the wicked and protection of the righteous. But these represent only one aspect of the task. Granting of peace and joy, of a sense of fulfilment to seekers who have striven long — this too is His task! The Avatar, or The Form Incarnate, is only the concretization of the yearning of seekers. It is the solidified sweetness of the devotion of godly aspirants. The Formless assumes the form for the sake of these aspirants and seekers. They are the prime cause. The cow secretes milk for the sustenance of the calf. That is the chief beneficiary. But, as we see, others also benefit from that milk. So too, though the devotees (bhaktas) are the prime cause, and their joy and sustenance the prime purpose, other incidental benefits also accrue, such as the fostering of dharma, the suppression of evil, and the overwhelming of the wicked. (Ch 1, Bhagavatha Vahini)
Devotees imagine they are searching for God. This is not true. It is God who is in search of devotees. – BABA
பகவானின் அவதாரங்கள் தீயோரை தண்டிப்பதற்கும் நல்லோரைக் காப்பதற்கும் மட்டுமே வருகின்றன என்று உலகம் சாதாரணமாகக் கருதுவது சகஜமே. ஆனால் அது அவதாரங்களின் பணிகளின் ஓர் அம்சம் மட்டுமே. மெய் உணர நீண்டகாலமாய் பாடுபட்டுக் கொண்டிருக்கும் பக்தர்களுக்கு அமைதியும் ஆனந்தமும் தருவது, அதாவது ஒரு திருப்திமயமான மனநிறைவு அளிப்பது - அதுவும் அவதாரங்களின் பணியே! பக்தர்களின் பாவ (bhaava) ரூபமே அவதாரம், பக்தர்களுடைய ஆனந்த ரசமே அவதாரம். உருவமில்லா இறைவன் பக்தர்களுக்காகவே அவதாரம் தரித்து வருகிறார். பக்தர்களே பிரதான காரணம். கன்றைப் போக்ஷிக்கவே பசு பாலைச் சுரக்கிறது. கன்றே பிரதானமாய் அப்பாலின் மூலம் பயன் பெறுகிறது. ஆனாலும், அந்தப் பால் மூலம் மற்றவர்களும் பயன் பெறுவதை நாம் காண்கிறோம். அது போலவே, பகவான் அவதரிப்பது பிரதானமாய் பக்தர்களுக்கு அனுக்கிரஹிப்பதற்காகத்தான் என்றாலும், தீமைகளை ஒடுக்குதல், துஷ்டர்களை தண்டித்தல், தர்மத்தை ரக்ஷித்தல் போன்ற அனுகூலங்களும் கூடவே தன்னியல்பாய் ஏற்படுகின்றன. (பாகவத வாஹினி,அத்தியாயம்-1)
பக்தர்கள் தாங்கள் இறைவனைத் தேடுவதாக எண்ணுகிறார்கள். அது உண்மையல்ல. இறைவன் தான் பக்தர்களைத் தேடிக்கொண்டிருக்கிறான். - பாபா