azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 21 Aug 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 21 Aug 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

Man today is unable to understand what is life, what is its goal, what is one's duty and what should be one's aim. Time is moving fast like a whirlwind. Man's allotted span of life is melting every moment like a block of ice. Man's life ends even before he is aware of his duty. What is his duty? Every individual has some aspirations, some ideals to be realised and some sacred paths to be trodden. He makes no effort to pursue these aims. What is the goal and purpose of one's life, what is its secret? Man hardly puts these questions to himself. He is content to devote himself to sensuous pleasures. This is not what he should do; it is not the aim of life. Every individual should manifest a divine ideal in one’s life. This ideal should absorb one’s entire life and activities. (Divine Discourse Aug 18, 1995)
For what purpose has God given us this body? It is only for dedicating it in the service of the Lord. - BABA
இன்றைய மனிதன், வாழ்க்கை என்றால் என்ன, இதன் இலட்சியம் என்ன, தன் கடமை என்ன, தனது குறிக்கோள் என்ன என்பதைப் புரிந்து கொள்வதில்லை. காலம் சூறாவளிக்காற்றைப் போல மிக வேகமாகக் கடந்து சென்று கொண்டே இருக்கிறது. இந்த உடலுக்கென்று அளிக்கப்பட்ட ஆயுள் ஒரு பனிக்கட்டியைப் போல ஒவ்வொரு கணமும் உருகிக் கொண்டே இருக்கிறது. தன் கடமை என்னவென்று அறிந்து கொள்வதற்கு முன்னரே மனிதன் கண்ணை மூடிவிடுகிறான். இந்தக் கடமை என்றால் என்ன? ஒவ்வொரு மனிதனுக்கென்றே சில நற்கருத்துகள், சில இலட்சியங்கள், நடந்து செல்லவேண்டிய சில புனிதமான மார்க்கங்கள் உள்ளன. இவற்றைக் குறித்து மனிதன் தகுந்த முயற்சியை மேற்கொள்வதில்லை. தன் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன, தன் வாழ்க்கையின் கடமை என்ன, இந்தப் பிறவியின் ரகசியம் என்ன என்பதைப் போன்ற கேள்விகளை எந்த மனிதனும் தன்னிடமோ பிறரிடமோ கேட்பதில்லை. வெறும் உண்டு உறங்கும் உலக சுகங்களை அனுபவிப்பதோடு மனிதன் திருப்தி அடைந்து விடுகிறான். இதுவல்ல அவனுடைய கடமை, இதுவல்ல அவனுடைய குறிக்கோள். ஒவ்வொரு மனிதனும் ஒரு தெய்வீகமான இலட்சியத்தை வாழ்ந்து காட்ட வேண்டும். இந்த உயர்ந்த இலட்சியத்தை எந்த மாற்றமும் செய்யாமல் எல்லாக் காலங்களிலும் எல்லா நிலைகளிலும் மனிதன் சாதித்துக் கொண்டே செல்ல வேண்டும். (தெய்வீக அருளுரை, ஆகஸ்ட்18, 1995)
எந்தக் குறிக்கோளுக்காக இறைவன் நமக்கு இந்த தேகத்தை அளித்துள்ளான்? இறைவனின் சேவையில் இதை அர்ப்பணிப்பதற்காக மட்டுமே. - பாபா