azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 18 Aug 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 18 Aug 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

The whole world is one, though you may find multiplicity. In this world of plurality, there is the underlying principle of unity. Of all the numbers 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, the most important number is 1. All the other numbers are mere modifications of the number 1. 1+1 becomes 2. 9–1 becomes 8. Thus 1 forms the basis for all the numbers. This is the unity in multiplicity, this unity is the Truth. Vedas say: “Om ityekaksharam Brahma,” — the syllable OM is Brahman. Divinity is not separate from OM. Out of this unity, the world has emerged. But you do not understand this Truth and take to different paths, with aspirations and ambitions. In fact, there is no difference between the world and Divinity. Just as different limbs form a complete human body, in the same way, human beings are like the limbs of society. Society forms the limb of entire humanity, humanity forms a limb of Nature and Nature is a limb of the Divine. Therefore, humanity, society and Nature are all the limbs of the Divine. (Divine Discourse Sep 11, 1998)
Real fulfilment, happiness, and comfort of life lies only in unity. People should understand the relationship between unity and diversity. - BABA
இவ்வுலகில் நீங்கள் பன்முகத்தன்மையைக் கண்டாலும் இவ்வுலகம் முழுவதும் ஒன்றுதான். ஏகத்துவம் இந்தப் பன்மை உலகின் அடிப்படைத் தத்துவமாக விளங்குகிறது. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 என்ற அனைத்து எண்களிலும் மிக முக்கியமான எண் 1. மற்ற எண்கள் அனைத்தும் 1 என்ற எண்ணின் மாற்றங்களே. 1+1 கூட்டினால் 2. ஒன்பதில் ஒன்றைக் கழித்தால் 8 ஆகிறது. இவ்வாறு 1 என்ற எண் அனைத்து எண்களுக்கும் அடிப்படையாக அமைகிறது. இதுவே பன்முகத்தன்மையில் இருக்கும் ஏகத்துவம், இந்த ஏகத்துவமே சத்யம். "ஓம் இத்யேகாக்ஷரம் பிரம்மா" - ‘ஓம்’ எனும் அக்ஷரமே பிரம்மம் என்று வேதங்கள் உரைக்கின்றன. ‘ஓம்’-ல் இருந்து தெய்வம் தனியாக இல்லை. இந்த ஏகத்துவத்திலிருந்து தான் உலகம் தோன்றியது. ஆனால் நீங்கள் இந்த சத்தியத்தைப் புரிந்து கொள்ளாமல், உங்கள் விருப்பங்களுடனும் லட்சியங்களுடனும் வெவ்வேறு பாதைகளில் செல்கிறீர்கள். உண்மையில், உலகத்திற்கும் தெய்வத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. வெவ்வேறு அங்கங்கள் சேர்ந்து ஒரு முழுமையான மனித உடல் உருவாவது போலவே, மனிதர்களும் சமுதாயத்தின் அங்கங்களைப் போன்றவர்கள். சமுதாயம் மனிதகுலத்தின் ஓர் அங்கமாகவும், மனிதகுலம் இயற்கையின் ஓர் அங்கமாகவும், இயற்கை தெய்வத்தின் ஓர் அங்கமாகவும் விளங்குகின்றன. எனவே, மனிதகுலம், சமுதாயம், இயற்கை ஆகிய அனைத்தும் தெய்வத்தின் அங்கங்களே. (தெய்வீக அருளுரை, செப்டம்பர்11, 1998)
ஏகத்துவத்தில் தான் நம் உபயோகம், ஆனந்தம், வாழ்க்கையில் அனுகூலம் ஆகியவை சேர்ந்துள்ளன. இந்த மனிதத்துவத்தில் உள்ள ஒற்றுமை-வேற்றுமை இவ்விரண்டின் சமத்துவத்தையும் அறிய வேண்டும். - பாபா