azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 15 Aug 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 15 Aug 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

After the death of Ravana, Vibhishana fell at the feet of Rama and said, “Swami, I never aspired to be the King of Lanka. I only wanted my brother to give up his bad qualities. I pray to You to take over the Kingdom of Lanka.” All the rakshasas also came and prayed to Rama that he should become the king of Lanka. Lakshmana also supported them saying, “O brother, Bharata is already ruling Ayodhya. Even if You return to Ayodhya, You may not be crowned as king. So, I request You to take over this kingdom and transform all rakshasas. Lanka is full of golden mansions. Where else can You find such a beautiful place? I’ll be happy if You rule this kingdom.” Rama lovingly took Lakshmana close to him and said, “Lakshmana, how could you get such a silly desire? Just because your mother is ugly, can you call any other beautiful woman your mother? Even though my country is poor compared to Lanka, I still consider it as my mother. Lanka may be full of gold, but I don't want it.” Students should develop this kind of love and faith towards their country. The teachers should inculcate such a spirit of patriotism in students. (Divine Discourse Sep 11, 1998)
When it comes to serving your country, you should be ready to take up any task. - BABA
இராவணன் மடிந்த பிறகு, விபீஷணன் ஸ்ரீராமனின் பாதத்தில் வீழ்ந்து, “ஸ்வாமி, நான் ஒருபோதும் இலங்கையின் அரசனாக விரும்பியதில்லை. என் சகோதரன் அவனுடைய கெட்ட குணங்களை விட்டுவிட வேண்டும் என்று மட்டுமே நான் விரும்பினேன். தாங்கள் இலங்கையின் அரசனாக முடிசூட்டிக்கொள்ள வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்" என்றான். அனைத்து அசுரர்களும் ஸ்ரீராமனை இலங்கைக்கு அரசனாக வேண்டினர். லக்ஷ்மணனும் அவர்களை ஆதரித்து, “ஓ சகோதரரே, ஏற்கனவே பரதன் அயோத்தியை ஆட்சி செய்கிறான். நீங்கள் அயோத்திக்குத் திரும்பினாலும், அரசராக முடிசூட்டப்படாமல் போகலாம். எனவே, இந்த ராஜ்ஜியத்தை ஏற்றுக்கொண்டு அனைத்து அசுரர்களையும் நல்மாற்றம் செய்யும்படி வேண்டுகிறேன். இலங்கை முழுவதும் தங்க மாளிகைகளால் நிறைந்துள்ளது. இவ்வளவு அழகான இடத்தை வேறெங்கு காண முடியும்? நீங்கள் அரசாண்டால் நான் மகிழ்ச்சி அடைவேன்" என்று கூறினான். ஸ்ரீராமன் அன்புடன் லக்ஷ்மணனைத் தன் அருகில் அழைத்து, “லக்ஷ்மணா, இப்படிப்பட்ட அற்பத்தனமான ஆசை உனக்கு எப்படி வந்தது? உன் தாய் அழகற்றவள் என்பதற்காக அழகான வேறெந்த பெண்ணையாவது உன் தாய் என்று நீ அழைக்க முடியுமா? இலங்கையுடன் ஒப்பிடும்போது என்னுடைய நாடு ஏழ்மையானதாக இருந்தாலும், நான் அதை எனது தாயாகவே கருதுகிறேன். இலங்கை முழுவதும் தங்கத்தால் நிறைந்திருக்கலாம், ஆனால் எனக்கு அது தேவையே இல்லை" என்று கூறினார். மாணவர்கள் தங்கள் நாட்டின் மீது இத்தகைய அன்பையும் நம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இதுபோன்ற தேசபக்தியை ஆசிரியர்கள் மாணவர்களிடம் வளர்க்க வேண்டும். (தெய்வீக அருளுரை, செப்டம்பர்11, 1998)
தாய்நாட்டிற்கான சேவை என்று வந்துவிட்டால், நீங்கள் எந்தப் பணியையும் மேற்கொள்வதற்குத் தயாராக இருக்க வேண்டும். - பாபா