azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 30 Jul 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 30 Jul 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

Once, a sculptor brought three dolls to the court of King Bhoja. All three looked alike and beautiful. The emperor summoned the prime minister and asked him to decide which of the three dolls was the best. The prime minister brought an iron wire and put it in the ear of one of the dolls. The wire came out from the other ear. He remarked, “This is the worst doll.” When he put the wire in the ear of the second doll, it came out of its mouth. He said, “This doll can be given the second prize.” When he put the wire in the ear of the third doll, it went inside and did not come out. The prime minister declared, “This deserves the first prize." What does this mean? It means that the person who assimilates what he hears is the best person. In this modern age, some people hear sacred teachings in one ear but immediately let them out of the other ear. Some others repeat like parrots what they read in the scriptures and what they hear from Swami. Only a few assimilate what they hear and put them into practice. (Divine Discourse, Aug 22, 1996)
Instead of having tons of knowledge an ounce of practice is enough. - BABA
ஒருமுறை சிற்பியொருவர் போஜராஜாவின் அரசவைக்கு மூன்று பொம்மைகளைக் கொண்டு வந்தார். மூன்றும் ஒரே மாதிரியாகவும் அழகாகவும் காணப்பட்டன. அரசர் அமைச்சரை வரவழைத்து, மூன்று பொம்மைகளில் எது சிறந்தது என்பதை முடிவு செய்யும்படி கூறினார். அமைச்சர் ஒரு இரும்புகம்பியைக் கொண்டு வந்து ஒரு பொம்மையின் காதில் நுழைத்தவுடன் மற்றொரு காதிலிருந்து அந்தக் கம்பி வெளியே வந்தது. "இது மிகவும் மோசமான பொம்மை" என்று அவர் குறிப்பிட்டார். இரண்டாவது பொம்மையின் காதில் கம்பியை நுழைத்தவுடன் அதன் வாயிலிருந்து கம்பி வெளிப்பட்டது. "இந்த பொம்மைக்கு இரண்டாம் பரிசு கொடுக்கலாம்" என்றார். மூன்றாவது பொம்மையின் காதில் கம்பியை நுழைத்தபோது அது உள்ளே சென்றும் வெளியே வரவில்லை. "இது முதல் பரிசுக்குத் தகுதியானது" என்று அமைச்சர் அறிவித்தார். இதன் பொருள் என்ன? தான் கேட்டதை கிரகித்துக் கொள்பவரே சிறந்த மனிதர் என்பதாகும். இந்த நவீன யுகத்தில், சிலர் புனிதமான போதனைகளை ஒரு காதால் கேட்டுவிட்டு உடனடியாக மற்றொரு காதால் அதை வெளியே விட்டு விடுகிறார்கள். வேறு சிலர் தாங்கள் புத்தகங்களில் படித்ததையும் ஸ்வாமியிடம் கேட்டதையும் கிளிப்பிள்ளைகளைப் போல திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டுமே தாங்கள் கேட்பதை கிரகித்துக்கொண்டு கடைப்பிடிக்கிறார்கள். (தெய்வீக அருளுரை, ஆகஸ்ட்22, 1996)
மலையளவு அறிவு கொண்டிருப்பதை விட துளியளவு கடைப்பிடித்தாலே கூட போதுமானதாகும். - பாபா