azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 08 Jul 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 08 Jul 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

Swami's Prema (Divine Love) has no trace of self-interest in it. It is absolutely pure. Swami knows only how to give, not how to receive. Swami's hand is held above for conferring something, not stretched for seeking anything. Moreover, once Swami has declared, "You are Mine", whatever wrong ways they may pursue, Swami will not abandon them. It may be asked why anyone who has been accepted by Swami as "You are Mine," should be subject to hardships and troubles. These troubles are the consequences of their own karma. They have to see that their conduct is right. If, supposing, the Lord blesses a man with a hundred years of life, he should not get puffed up with pride and start jumping from a tree in the confidence that he will live for a century. He may live for a hundred years, but may have his leg broken in the fall. So, in accepting the blessing of God, one should also try to lead a righteous life. (Divine Discourse, Jul 13, 1984)
Whatever you do, wherever you are, remember that I am with you, in you; that will save you from conceit and error. – BABA
ஸ்வாமியின் ப்ரேமை சுயநலத்தின் சுவடில்லாதது, நிர்மலமானது. ஸ்வாமி கொடுப்பதை மட்டுமே அறிவாரே தவிர பெறுவதை அல்ல. ஸ்வாமியின் கரம் ஒன்றைக் கொடுப்பதற்காக மேலே இருக்குமே தவிர, பெறுவதற்காக அல்ல. மேலும், “நீ என்னுடைவன்” என்று ஸ்வாமி ஒரு முறை சொன்ன பிறகு, அவர்கள் பலவிதத்தில் ஸ்வாமிக்கு எதிரான வழிகளில் செயல்பட்டாலும், ஸ்வாமி அவர்களைக் கைவிடமாட்டார். இப்படி ஸ்வாமியால் “நீங்கள் என்னுடையவர்கள்” என்று ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள், ஏன் கஷ்டங்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளாகிறார்கள் என்ற கேள்வி எழக்கூடும். இந்தத் துன்பங்கள் அவர்களது கர்மவினைகளின் பலன்களே. அவர்கள் தங்களது நடத்தை சரியானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை, இறைவன் ஒருவருக்கு நூறாண்டு கால ஆயுளை அருளினால், அவர் தற்பெருமையால் பூரித்துப் போய், நூறாண்டு காலம் வாழப் போகிறோமே என்ற நம்பிக்கையில் ஒரு மரத்திலிருந்து குதிக்க முயற்சிக்கக் கூடாது; அவர் நூறாண்டு காலம் வாழலாம், ஆனால் விழுந்தால் தனது காலை உடைத்துக் கொள்ளக் கூடும். எனவே, இறைவன் அருளிய ஆயுட்காலத்தை கருத்தில் கொண்டு, ஒருவர் தார்மீகமான வாழ்க்கை நடத்த முயல வேண்டும். (தெய்வீக அருளுரை,ஜூலை13, 1984)
நீங்கள் எதைச் செய்தாலும் எங்கிருந்தாலும் நான் உங்களுடன் உங்களுள் இருக்கிறேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்; அது உங்களை அகந்தை கொள்வதிலிருந்தும் தவறிழைப்பதிலிருந்தும் காப்பாற்றும். - பாபா