azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 27 Jun 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 27 Jun 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

Contentment, humility, detachment - these keep you on the path of Truth. A street-hawker had on his head a basket full of empty bottles, as he walked along to the bazaar. He hoped to sell the lot at a profit of ten rupees and, in ten days, he calculated his earnings would have accumulated to a hundred rupees. With that as capital, he planned to switch on to more profitable deals, so that he imagined he could make a pile of a lakh of rupees in a few months and build a bungalow with a lovely garden tended by a regiment of servants, beaming all round the house. There, he saw himself on a sofa in the greenery playing with his grandchildren. As he was engrossed in that charming scene, suddenly he saw among his grandchildren, the children of one of the servants; he got angry at this unwanted intrusion. Believing his fantasy to be a reality, he suddenly grabbed the child and gave it a swift hefty push, only to find that the basket of bottles had fallen on the road and all hopes of even the ten rupees lost! That was the end of a dream built on the slender basis of greed. (Divine Discourse, Oct 24, 1965)
Contentment cannot be won by the ignorant one, who piles one wish on another and builds one plan after another, who pines perpetually, worries always, and sets the heart ablaze with greed. – BABA
மனநிறைவு, பணிவு, பற்றின்மை - இவையே உங்களை சத்தியத்தின் பாதையில் வழிநடத்தும். ஒரு தெரு வியாபாரி, தனது தலையில் ஒரு கூடை நிறைய காலி பாட்டில்களை சுமந்து கொண்டு பஜாருக்கு நடந்து சென்று கொண்டிருந்தான். கூடையில் இருந்த அனைத்தையும் பத்து ரூபாய் லாபம் வைத்து விற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில், இன்னும் பத்து நாட்களில் தனது வருமானம் நூறு ரூபாய் ஆகிவிடும் என்று கணக்குப் போட்டான். அதையே மூலதனமாகக் கொண்டு அதிக லாபம் தரும் வியாபாரங்களுக்கு மாறத் திட்டமிட்டு, அவற்றின் மூலம் ஒரு லட்ச ரூபாய் ஈட்டி, ஒரு அழகான தோட்டமும், வீடெங்கும் பணி செய்வதற்கு வேலைக்காரர்களின் ஒரு பட்டாளத்தையும் கொண்ட ஒரு மாளிகையைக் கட்டிவிடலாம் என்று கற்பனை செய்து கொண்டான். அந்த தோட்டத்தின் புல்வெளியில் ஒரு சோபாவில் அமர்ந்து தனது பேரக்குழந்தைகளுடன் விளையாடுவதாக எண்ணிக்கொண்டான். அந்த இனிமையான கற்பனையில் ஆழ்ந்திருந்த அவன், திடீரென்று தன் பேரக்குழந்தைகள் மத்தியில், வேலைக்காரன் ஒருவனின் பிள்ளைகள் இருப்பதைக் கண்டான்; இந்த தேவையற்ற குறுக்கீட்டால் அவன் ஆத்திரமடைந்தான். தன் கற்பனையை நிஜம் என்று நம்பிய அவன், திடீரென்று வேலைக்காரனின் குழந்தையைப் பிடித்து வேகமாகத் தள்ளினான்; அப்போது பாட்டில்கள் நிறைந்த கூடை சாலையில் விழுந்து உடைந்து, அன்று கிடைக்கும் என்று நம்பிய பத்து ரூபாய் லாபத்தையும் இழந்துவிட்டதை உணர்ந்தான்! பேராசையின் பலவீனமான ஆதாரத்தின் மீது கட்டப்பட்ட கனவின் முடிவு அதுதான். (தெய்வீக அருளுரை, அக்டோபர் 24, 1965)
ஆசைக்கு மேல் ஆசை கொண்டு, திட்டத்தின் மேல் திட்டம் தீட்டிக்கொண்டு, முடிவேயில்லாத ஏக்கமும், நிரந்தரக் கவலையும், பேராசையால் வெந்து புழுங்கும் இதயத்தையும் கொண்ட அஞ்ஞானியால் மனநிறைவைப் பெறவே முடியாது. - பாபா