azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 25 Jun 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 25 Jun 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

What is the reason for this incapacity to realise the Divinity within? It’s because we don’t realise the soiled cover in which it’s wrapped. If our clothes get dirty, we change them because we are ashamed to appear in dirty garments. If our house is dirty, we try to clean it so that visitors may not get a bad impression. But when our minds and our hearts are polluted, we do not feel ashamed! Is it not strange that we should be so concerned about the cleanliness of our clothes and our homes, but are not concerned about the purity of our hearts and minds which affect our entire life? To purify our hearts and minds, the first thing we must do is to lead a righteous life. Our actions must be based on morality. Indulging in abuse of others or inflicting pain on them is not a sign of human nature. The evil that we do to others ultimately recoils on us! (Divine Discourse, Apr 02, 1984)
Whatever sacred acts you may do in the external world, if you have no purity of mind and heart, all of them are valueless. - BABA
நம்முள் உறையும் தெய்வத்தை நம்மால் உணர முடியாமல் இருப்பதற்குக் காரணம் என்ன? அழுக்கு படிந்த உறையினுள் அது சுற்றி வைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ளாததே. நமது உடைகள் அழுக்கானால் அவற்றை மாற்றிக்கொள்கிறோம்; ஏனெனில், அழுக்கு உடையை அணிந்திருப்பதற்கு வெட்கப்படுகிறோம். நமது இல்லம் அசுத்தமாக இருந்தால், விருந்தாளிகள் நம்மைப் பற்றி தவறாக நினைக்கக்கூடாது என்பதற்காக நாம் சுத்தம் செய்கிறோம். ஆனால், நமது மனங்களும் இதயங்களும் களங்கம் அடைந்திருந்தால் நாம் வெட்கப்படுவதில்லை! நமது உடைகள் மற்றும் இல்லங்களின் தூய்மையைப் பற்றி இவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்ளும் நாம், நமது வாழ்க்கை முழுவதையுமே பாதிக்கும் இதயம் மற்றும் மனத்தூய்மையைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பது எத்துணை விசித்திரம்! நமது இதயங்கள் மற்றும் மனங்களைத் தூய்மைப்படுத்துவதற்கு நாம் முதன்முதலில் செய்ய வேண்டிய பணி தார்மீகமான வாழ்க்கையை நடத்துவதுதான். நமது செயல்கள் நல்லொழுக்கத்தை ஆதாரமாகக் கொண்டு இருக்க வேண்டும். பிறரை நிந்திப்பதும், அவர்களைத் துன்பத்துக்கு ஆளாக்குவதும் மனித இயல்பிற்கு அழகல்ல. பிறருக்கு நாம் செய்யும் தீங்கு, முடிவில் நம்மையே திருப்பித் தாக்கும்! (தெய்வீக அருளுரை, ஏப்ரல் 2, 1984)
நீங்கள் புறவுலகில் புனிதமான பணிகள் எதைச் செய்தாலும், உங்களுக்கு இதயம் மற்றும் மனத்தூய்மை இல்லையென்றால் அவை அனைத்தும் மதிப்பற்றவையே. - பாபா