azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 24 Jun 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 24 Jun 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

If aspirants are unsuccessful in following one discipline, they must seek and know the cause of their defeat. This analysis is necessary. They must then see that, in the second stage, the trait is not repeated. They should try their best to guard themselves against it. In such matters, one must be quick and active, like the squirrel. Agility and vigilance must be combined with sharpness of intelligence too. All this can be earned only through peace. Steady and undeviating earnestness is very important for avoiding and overcoming conflicts in the mind. One must be calm and unruffled. Courage, wise counsel, and steadiness —these make the willpower (iccha-shakti) strong and sturdy. Lustre in the face, splendour in the eye, a determined look, a noble voice, large-hearted charity of feeling, unwavering goodness — these are the signposts of a developing and progressing will-force. A mind without agitations, a joyous and unblemished outlook — these are the marks of a person in whom peace has taken root! (Ch 6, Prasanthi Vahini)
We can understand the workings of the universe by understanding the power and potency of the mind. - BABA
ஆன்மிக சாதகர்கள் ஒரு முயற்சியில் தோல்வி அடைந்துவிட்டால் அந்த தோல்விக்கான காரணத்தைத் தேடித் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த ஆய்வு அவசியமானது. பின்னர் இரண்டாவது கட்டத்தில் இந்த மனப்பாங்கு மீண்டும் வராமல் அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். தங்களால் இயன்ற வரை இதற்கு எதிராக அவர்கள் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட விஷயங்களில் ஒருவர் அணிலைப் போல விரைவாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும். புத்திகூர்மையோடு சுறுசுறுப்பும் விழிப்புணர்வும் இணைந்திருக்க வேண்டும். இவை அனைத்தையும் சாந்தியின் மூலமாக மட்டுமே பெற முடியும். மனக்குழப்பங்களைத் தவிர்ப்பதற்கும் வெல்வதற்கும் உறுதியான மாறாத விடாமுயற்சி மிகவும் முக்கியம். ஒருவர் அமைதியாகவும் கலக்கமில்லாமலும் இருக்க வேண்டும். தைரியம், நல்ல அறிவுரை மற்றும் நிலைகுலையாமை - இவையே இச்சாசக்தி எனும் மன உறுதியை வலியதாகவும் சக்திவாய்ந்ததாகவும் ஆக்குகின்றன. முகத்தில் பொலிவு, கண்ணில் ஒளி, உறுதியான பார்வை, கம்பீரமான குரல், தயாள குணம், ஸ்திரமான இயல்பு - இவையே ஒருவருடைய மனத்திண்மை வளர்கின்றது என்பதற்கான அடையாளங்கள். மனப்போராட்டம் இல்லாதிருத்தல், தெளிவாக, சந்தோஷமாக இருத்தல் ஆகியவையே ஒருவரிடம் சாந்தி ஆழ்ந்து வேரூன்றியுள்ளது என்பதற்கான அடையாளச் சின்னங்களாகும்! (பிரசாந்தி வாஹினி, அத்தியாயம்-6)
மனதின் மகத்துவத்தைப் புரிந்துகொள்வதன் மூலம் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். - பாபா