azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 21 Jun 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 21 Jun 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

Good and bad - everything is God’s will. We should not differentiate between the two. People believe that good events are God’s will and unfortunate ones are not. In this world no one eats only sweet food or only bitter food. Everyone eats both sweet and bitter food. In other words, everyone experiences both good and bad. If we inquire, bitter experiences are necessary! Only then can we appreciate the value of peace, contentment and bliss. Difficulties and joy go together. No one can separate them. Happiness doesn’t exist alone anywhere. Happiness results when difficulties are transcended. A baby gradually becomes a grandparent. But the two are not different. Similarly, the good in us can turn bad and the bad can become good. We should experience the unity of both. That which makes us understand this unity is our Divinity. When we distance ourselves from Divinity, we deteriorate to demonic and animal states. (Ch 8, Summer Showers 1995)
Acceptance of both good and bad with equal-mindedness is a supreme virtue that will lead you to the realisation of Brahman. - BABA
நல்லது கெட்டது எல்லாம் இறைவனின் சங்கல்பமே. இரண்டையும் நாம் வேறுபடுத்திப் பார்க்கக் கூடாது. நல்லவை எல்லாம் இறைவனோடு சம்பந்தப்பட்டது என்றும், கெட்டவை தீயவரோடு சம்பந்தப்பட்டது என்றும் மக்கள் நினைக்கிறார்கள். இவ்வுலகில் யாரும் இனிப்பான உணவை மட்டுமே அல்லது கசப்பான உணவை மட்டுமே உண்பதில்லை. எல்லோரும் இனிப்பு மற்றும் கசப்பு என்ற இரண்டு வகை உணவையும் உண்கின்றனர். வேறுவிதமாகக் கூறுவதானால், எல்லோரும் நல்லது கெட்டது என இரண்டையுமே அனுபவிக்கிறார்கள். நாம் நன்கு ஆராய்ந்து பார்த்தால் கசப்பான அனுபவங்கள் அவசியமே! அப்போதுதான் நாம் சாந்தி, சந்தோஷம், ஆனந்தம் ஆகியவற்றின் மதிப்பை உணர முடியும். இன்பமும் துன்பமும் இணைந்தே இருக்கும். அவற்றைப் பிரிக்க யாராலும் முடியாது. மகிழ்ச்சி என்பது எங்கோ தனியாக இல்லை. துன்பங்களைக் கடந்த பின்னரே மகிழ்ச்சி உண்டாகிறது. பிறந்த குழந்தை படிப்படியாக தாத்தாவாக ஆகிறது. ஆனால் இருவரும் வெவ்வேறல்ல. அதேபோல நம்மில் உள்ள நல்லவை கெட்டதாகவும், கெட்டவை நல்லதாகவும் மாறக்கூடும். எனவே இரண்டின் ஏகத்துவத்தை நாம் உணர வேண்டும். இந்த ஏகத்துவத்தை நமக்கு உணர வைப்பதுதான் நம்முள் உள்ள தெய்வத்துவம். நாம் தெய்வத்துவத்தில் இருந்து விலகிச் செல்லும்போது, அசுர மற்றும் மிருக நிலைகளுக்கு வீழ்ந்துவிடுகிறோம். (அத்தியாயம்-8, கோடையருள் மழை 1995)
நல்லதும் கெட்டதும் நம் நன்மைக்கே என்று ஏற்றுக்கொள்வதுதான் உத்தமமான பிரம்ம தத்துவம் ஆகும். - பாபா