azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 19 Jun 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 19 Jun 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

Truly speaking, human life is holy, sublime, sacred, ever-new, and ever-fresh. Upanishads try to arouse and awaken man into the awareness of this Truth for man is slumbering in ignorance, wrapped in his ego and desires. "Awake and adore the Sun and recognise your Reality in the light of his rays," that is the call reverberating from the Upanishads. But, man is deaf to this entreaty. Three eshanas (ardent desires) are holding man back: he is enamoured of wealth, spouse and children. These obstruct him at each step and act as handicaps for his spiritual advancement. Of course, wherewithal is essential for the process of life and labouring for it cannot be avoided. But, beyond a limit riches foul the mind and breed arrogance. They must be used for good purposes, promoting virtue and well-being, fostering Dharma (virtue) and fulfilling one's duties along the Divine path. If riches are spent for realising fleeting desires, they can never be enough, and the ego discovers newer and more heinous ways of earning and spending. (Divine Discourse, Apr 13, 1981)
Lead your life with your mind always focused on the goal. - BABA
உண்மையைச் சொல்லப் போனால், மனித வாழ்க்கை பவித்ரமானது, உன்னதமானது, புனிதமானது, தூயது, புத்தம்புதியது. அகந்தையாலும் ஆசைகளாலும் கட்டுண்டு அஞ்ஞானத்தில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்கும் மனிதனைத் தட்டி எழுப்பி மெய்யுணர்வு நிலைக்குக் கொண்டு செல்ல உபநிடதங்கள் முயல்கின்றன. “எழுந்திரு, சூரியனை ஆராதித்து, அவனுடைய அருள்ஒளியில் உன் மெய்யுணர்வைப் பெறுவாயாக” என்பதே உபநிடதங்களிலிருந்து எதிரொலிக்கும் செய்தியாகும். ஆனால், மனிதன் இந்த வேண்டுகோளுக்குச் செவிசாய்ப்பதில்லை. ஈஷணத்ரயம் எனும் மூன்று ஆசைகளாகிய தனேஷண, தாரேஷண, புத்ரேஷண - அதாவது செல்வம், மனைவி, மக்கள் மீதான ஆசைகளில் மனிதன் ஆழ்ந்திருக்கிறான். இவை அவனை ஒவ்வொரு அடியிலும் தடுத்து நிறுத்தி, அவனது ஆன்மிக முன்னேற்றத்திற்கு இடையூறு செய்கின்றன. வாழ்க்கை நடத்துவதற்குப் பணம் அத்தியாவசியமே, அதை ஈட்டுவதற்காக உழைப்பதும் தவிர்க்கமுடியாதது. ஆனால், அளவுக்கு மீறிய செல்வம் மனதைக் கெடுத்து, கர்வத்தை வளர்க்கிறது. அவை நல்ல நோக்கங்களுக்காகவும், நல்லொழுக்கம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தவும், தர்மத்தைப் பேணிக்காத்து தெய்வீகப் பாதையில் ஒருவரின் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் பயன்படுத்தப்பட வேண்டும். தாற்காலிகமான ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக செல்வங்கள் செலவழிக்கப்பட்டால், அவை ஒருபோதும் போதுமானதாக இருக்காது; மேலும் ஒருவனுள் இருக்கும் அகந்தை, சம்பாதிப்பதற்கும் செலவு செய்வதற்கும் பற்பல புதிய கொடிய வழிகளைக் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கும். (தெய்வீக அருளுரை, ஏப்ரல் 13, 1981)
உங்கள் மனதில் எப்போதும் வாழ்க்கையின் குறிக்கோளான இறைவனையே மையமாகக் கொண்டு வாழ்க்கையை நடத்துங்கள். - பாபா