azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 17 Jun 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 17 Jun 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

Control gives power; regulation gives greater strength; discipline reveals Divinity. People pine for happiness. But, can one gain it by allowing a free rein to senses? Can one be happy eating four meals a day, or riding prestigious cars or living in many-roomed bungalows? No. Happiness is in helping others. It is brought about by giving up, not by hoarding. Catering to senses makes man bestial, and will drag him into dirt and disgrace. Yogi is the person who has fixed his mind on the Divine, not on the mundane. Gita exhorts man to transform himself as "Satatam Yoginah - be ever a yogi." But man is Yogi in the morning, turning into bhogi (sensuous man) at noon and a rogi (disease-struck person) when day ends! Man lives today without faith and without ideals. Dharma (righteous living) should be the base and Moksha (liberation), the superstructure; but the world has neglected both and it relies on artha (wealth), and kama (desire) for happiness and liberation! (Divine Discourse, Apr 13, 1981)
Discipline should govern every action of yours all through the day. – BABA
கட்டுப்பாடு சக்தியை அளிக்கிறது; ஒழுங்குமுறை அதிக வலிமையை அளிக்கிறது; ஒழுக்கம் தெய்வீகத்தை வெளிப்படுத்துகிறது. மக்கள் மகிழ்ச்சிக்காக ஏங்குகிறார்கள். ஆனால், புலன்களுக்கு சுதந்திரம் கொடுப்பதன் மூலம் ஒருவர் அதைப் பெற முடியுமா? ஒருவர் ஒரு நாளைக்கு நான்கு வேளை உணவு உண்பதாலும், விலைமதிப்புள்ள கார்களில் பயணிப்பதாலும், பல அறைகள் கொண்ட மாளிகைகளில் வசிப்பதாலும் ஆனந்தமாக இருக்க முடியுமா? இல்லை! ஆனந்தம்என்பது மற்றவர்களுக்கு உதவுவதில் தான் இருக்கிறது. இது கொடுத்து உதவுவதால் கிடைக்கிறதே அன்றி பதுக்கி வைப்பதால் அல்ல. புலன்களுக்குத் தீனி போடுவது மனிதனை மிருகமாக்கி, அவனை கீழான நிலைக்குத் தள்ளிவிடுகிறது. யோகி என்பவன் இறைவன் மீது மனதை நிலைநிறுத்துபவனே அன்றி, உலகியலானவற்றின் மீதல்ல. "சததம் யோகினஹ” – அதாவது, எப்போதும் யோகியாக இருக்குமாறு கீதை மனிதனுக்கு அறிவுறுத்துகிறது. ஆனால் மனிதன் காலையில் யோகியாகவும், நண்பகலில் போகியாகவும், இரவில் ரோகியாகவும் இருக்கிறான்! இன்று மனிதன் இறைநம்பிக்கையும் இலட்சியங்களும் இன்றி வாழ்கிறான். தர்மம் அடித்தளமாகவும், மோட்சம் அதன் மீது எழுப்பப்படும் கட்டிடமாகவும் இருக்க வேண்டும்; ஆனால் உலகம் இவ்விரண்டையும் புறக்கணித்துவிட்டு, ஆனந்தத்திற்கும் மோட்சத்திற்கும், ‘அர்த்தம்’ என்ற செல்வத்தையும், ‘காமம்’ என்ற ஆசையையும் மட்டுமே நம்பியுள்ளது! (தெய்வீக அருளுரை, ஏப்ரல் 13, 1981)
ஒழுக்கம் என்பது உங்களின் ஒவ்வொரு செயலையும் நாள் முழுவதும் நெறிப்படுத்துவதாக இருக்க வேண்டும். - பாபா