azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 14 Jun 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 14 Jun 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

Apart from the exercise of diligence in food consumed, there should be also Daiva chintana (contemplation of the Divine). Because people don't think of God they are subjected to a lot of misery. Without divine thought, man is harbouring two bad qualities. One - he hides many defects and evil qualities within himself. The other - he magnifies even minor faults in others. Because of such evil qualities among human beings, diseases are also on the increase. Only when human effort is there, with God's grace, good results will be attained. The Sanskrit saying declares "Dharmartha Kama Mokshanam Arogyam Mulam Utthamam" (For the attainment of the four goals of life, good health is essential). Even though one may have all the wealth in the world, if his health is impaired, he is miserable. Whether a villager or an urban dweller, good health is the most important acquisition one should aspire for to lead a meaningful life. (Divine Discourse, Jan 29, 1994)
Man's mind shines with resplendent purity if he cultivates noble thoughts, ideas and feelings. It is only by developing the purity of mind that we can ensure the purity of action. Only pure deeds can yield pure results. - BABA
உண்ணும் உணவில் அக்கறை கொண்டிருப்பதோடு கூடவே தெய்வ சிந்தனையையும் கொண்டிருக்க வேண்டும். மனிதர்கள் தெய்வ சிந்தனையில் ஈடுபடாததால் பல துன்பங்களுக்கு ஆளாகின்றனர். மனிதன் தெய்வ சிந்தனையைக் கொண்டிராமல் இரண்டு தீய குணங்களைக் கொண்டிருக்கிறான். ஒன்று - தன்னுடைய பல குறைபாடுகளையும் தீய குணங்களையும் தனக்குள்ளேயே மறைத்துக் கொள்கிறான். மற்றொன்று - மற்றவர்களின் சிறு குறைகளைக் கூட பெரிதாக்குகிறான். மனிதர்களிடம் இத்தகைய தீய குணங்கள் இருப்பதால், மறுபுறம் நோய்களும் அதிகரித்து வருகின்றன. மனித முயற்சி இருந்தால்தான் இறைவன் அருளால் நல்ல பலன்களை அடைய முடியும். "தர்மார்த்த காம மோக்ஷானாம் ஆரோக்கியம் மூலம் உத்தமம்" அதாவது, வாழ்க்கையின் நான்கு புருஷார்த்தங்களை அடைய நல்ல ஆரோக்கியம் அவசியம் என்பது ஒரு வடமொழிக் கூற்று. உலகின் எல்லாச் செல்வங்கள் ஒருவனிடம் இருந்தாலும், உடல்நிலை பாதிக்கப்பட்டால் அவனுடைய நிலை பரிதாபகரமாக ஆகிவிடுகிறது. ஒருவர் கிராமவாசியோ அல்லது நகரவாசியோ, அவர் அர்த்தமுள்ள வாழ்க்கையை நடத்துவதற்குப் பெற வேண்டிய மிக முக்கியமான செல்வம் நல்ல ஆரோக்கியமே! (தெய்வீக அருளுரை, ஜனவரி 29, 1994)
உன்னத எண்ணங்கள், சிந்தனைகள் மற்றும் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால், மனிதனின் மனம் பளிச்சிடும் தூய்மையுடன் மின்னும். மனத் தூய்மையை வளர்ப்பதன் மூலமாகவே செயலின் தூய்மையை உறுதி செய்ய முடியும். தூய செயல்கள் மட்டுமே தூய பலன்களைத் தரும். - பாபா