azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 13 Jun 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 13 Jun 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

The true form of knowledge is humility. Eschewing pride and self-conceit, pursue the right goal. Students today are acquiring considerable scientific knowledge. It serves only to promote civilised living in the phenomenal world. But what the students need today is the refinement of the heart. This is possible only through an internal process. Students who have imbibed modern culture should not only develop their intellects but should also develop a broad outlook. In these times, students have a two-fold duty: One is to face the challenges of modern civilization, and the other is to protect and preserve the ancient spiritual and cultural heritage of the country. Students should shine as ideal citizens of the nation. A complete education is that which makes a man compassionate. Besides giving appropriate exercises to the body, students should strive to cultivate the heart and keep it pure. (Divine Discourse, Mar 04, 1993)
Together with the knowledge of the natural sciences, one has to acquire humility, discipline and a good character. - BABA
கல்வி அறிவின் உண்மையான வடிவம் பணிவே. தற்பெருமையையும் அகந்தையையும் தவிர்த்து, சரியான இலக்கை நாடுங்கள். இன்றைய மாணவர்கள் விஞ்ஞான அறிவை கணிசமாகப் பெறுகின்றனர். இது புலன்களால் உணரத்தக்க உலகில் நாகரீக வாழ்க்கையை நடத்துவதை ஊக்குவிக்க மட்டுமே உதவுகிறது. ஆனால் இன்று மாணவர்களுக்குத் தேவை இதயத்தைச் செம்மைப்படுத்துவதுதான். இது அகத்தில் நிகழும் மாற்றத்தினால் மட்டுமே சாத்தியமாகும். நவீன கலாச்சாரத்தைப் பின்பற்றும் மாணவர்கள் தங்கள் அறிவுத்திறனை மட்டுமே வளர்த்துக் கொள்ளாமல், பரந்த கண்ணோட்டத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்தக் காலகட்டத்தில், மாணவர்களுக்கு இரண்டு விதமான கடமைகள் உள்ளன: ஒன்று, நவீன நாகரிகத்தின் சவால்களை எதிர்கொள்வது, மற்றொன்று, நாட்டின் பண்டைய ஆன்மிக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைப் பேணிப் பாதுகாப்பது. மாணவர்கள் தேசத்தின் இலட்சியக் குடிமகன்களாக பிரகாசிக்க வேண்டும். பரிபூரணமான கல்வி என்பது ஒரு மனிதனை கருணையுள்ளவனாக ஆக்க வேண்டும். உடலுக்குத் தகுந்த பயிற்சிகளைத் தருவதுடன், இதயத்தைப் பண்படுத்தி, தூய்மையாக வைத்துக் கொள்ள மாணவர்கள் பாடுபட வேண்டும். (தெய்வீக அருளுரை, மார்ச் 04, 1993)
உலகியலான அறிவுடன் கூடவே, ஒருவர் பணிவு, ஒழுக்கம், நற்குணநலன் ஆகியவற்றையும் பெற வேண்டும். - பாபா