azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 30 May 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 30 May 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

As a first step towards the acquisition of viveka (wisdom) and vairagya (detachment), enter from now on into a discipline of Namasmarana - the incessant remembrance of God through the Name of the Lord. A fashionable excuse that is trotted out by those who do not like this discipline is 'want of time!' It does not need any special time or extra allotment of time; it can be done always, in the waking stage, whether you are bathing or eating, walking or sitting. All the hours now spent in gossip, in watching sports or films, or in hollow conversation can best be used for silent contemplation of the Name and Form, and splendour of the Lord. Now, you complain of want of appetite for God. You have lost appetite because you have eaten unwholesome food, not because you have had an excess of good food. You have no knowledge of which food is wholesome, what are its components, etc. You believe that the unwholesome food you get, through the impure gateways of the senses, will keep you healthy! Learn this lesson from here and return, better equipped, to your places. (Divine Discourse, Jan 30, 1965)
Let each and every street reverberate with His Divine glory. Let each and every cell of your body be filled with His Divine Name. - BABA
விவேகத்தையும், வைராக்கியத்தையும் பெறுவதன் முதற்படியாக, இறைவனின் திருநாமத்தின் மூலம் இடையறாது அவனை நினைவுகூறும் ஆன்மிக சாதனையான இறைநாமஸ்மரணையை இப்போதிலிருந்தே கடைப்பிடியுங்கள். இந்த ஆன்மிக சாதனையை விரும்பாதவர்கள் கூறும் நாகரீக சாக்குப்போக்கு 'நேரம் இல்லை!' என்பதே. இதற்கென ஒரு குறிப்பிட்ட நேரமோ அல்லது கூடுதல் நேரமோ ஒதுக்கத் தேவையில்லை; நீங்கள் குளிக்கும்போது, சாப்பிடும்போது, நடக்கும்போது, அமர்ந்திருக்கும்போது, விழித்திருக்கும் போதெல்லாம் அதைச் செய்யலாம். தற்போது வீண் வம்புகளிலும், விளையாட்டு அல்லது திரைப்படங்களைப் பார்ப்பதிலும், வெட்டிப்பேச்சிலும் கழிக்கப்படும் எல்லா நேரத்தையும் இறைவனின் நாமரூபத்தையும், மகிமையையும் அமைதியாக தியானிப்பதற்குச் சிறந்த முறையில் பயன்படுத்தலாம். இப்போது, எனக்கு இறைவன் மீது வேட்கை ஏதுமில்லை என்று சொல்கிறீர்கள். ஆனால் ஒவ்வாத உணவை உண்டதால் தான் அந்த வேட்கை இல்லாமல் போயிற்றே தவிர நல்ல உணவை அதிகமாக உண்டதால் அல்ல. எந்த உணவு ஆரோக்கியமானது, அதன் கூறுகள் என்னென்ன என்பதைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. புலன்களின் தூய்மையற்ற வாயில்களின் வழியாக நீங்கள் பெறும் ஒவ்வாத உணவு உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்கள். இங்கிருந்து இந்தப் பாடத்தைக் கற்று, நன்கு தயார்ப்படுத்திக்கொண்டு, உங்கள் இடங்களுக்குத் திரும்பிச் செல்லுங்கள். (தெய்வீக அருளுரை, ஜனவரி 30, 1965)
ஒவ்வொரு வீதியிலும் இறைவனுடைய மகிமை முழங்கட்டும். உங்கள் உடலின் ஒவ்வொரு உயிரணுவும் இறைவனுடைய திருநாமத்தால் நிறைந்திருக்கட்டும். - பாபா