azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 28 May 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 28 May 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

A diamond gets enhanced value when it goes through the process of cutting and faceting. Likewise, gold, taken out as ore from the earth, becomes pure and valuable after refinement. Similarly, sadhana is necessary to elevate life from trivial to the sublime. No one is a scholar or a man of virtue at birth. Only through various endeavours, he becomes a scholar and a righteous person. In creation there are many things which are naturally bad. Out of these bad things, good emerges. When one desires something, that desire is associated with aversion to something else. Man's life is bound up with likes and dislikes, good and bad thoughts, union and separation. Hence samsara (worldly life) is compared to a vast ocean on which waves are constantly bringing about union and separation. The same ocean contains pearls and gems. Therefore, we must face and overcome trials and tribulations of life. If we fail in this, our life becomes wasted. Life is full of trials. If these difficulties are not there, life will have little value! (Divine Discourse, June 01, 1991)
Fortune is as much a challenge to one’s equanimity as misfortune is. - BABA
ஒரு வைரம் அறுக்கப்பட்டு நன்கு பட்டை தீட்டப்படுவதால் அதன் மதிப்பு கூடுகிறது. அதேபோல், பூமியில் இருந்து தாதுவாக எடுக்கப்பட்ட தங்கம், சுத்திகரிக்கப்பட்ட பிறகு தூய்மையாகவும் மதிப்புமிக்கதாகவும் ஆகிறது. அது போலவே, வாழ்க்கையை அற்பமான நிலையிலிருந்து உன்னத நிலைக்கு உயர்த்த ஆன்மிக சாதனை அவசியமாகிறது. பிறப்பிலேயே எவரும் அறிஞனாகவோ, குணவந்தனாகவோ இருப்பதில்லை. பல்வேறு முயற்சிகளால் மட்டுமே ஒருவர் அறிஞராகவும், தார்மிகமானவராகவும் படிப்படியாக மாறுகிறார். படைப்பில் இயற்கையாகவே பல கெட்ட விஷயங்கள் உள்ளன. இந்த கெட்ட விஷயங்களிலிருந்தே நல்லது வெளிப்படுகிறது. ஒருவர் எதன் மீதாவது ஆசைப்படும்போது, அந்த ஆசை மற்றொன்றின் மீதான நிராசையுடன் தொடர்புடையதாக இருக்கிறது. மனித வாழ்க்கை, ஆசைகள்-நிராசைகள், நல்ல எண்ணங்கள்-கெட்ட எண்ணங்கள், இணைதல்-பிரிதல் ஆகியவற்றுடன் கூடியது. ஆகவே சம்சாரம் எனும் உலக வாழ்க்கை, இணைப்பையும் பிரிவையும் இடையறாது ஏற்படுத்தும் அலைகள் நிறைந்த பரந்த கடலுடன் ஒப்பிடப்படுகிறது. அதே கடலில்தான் முத்துக்களும் ரத்தினங்களும் உள்ளன. எனவே, வாழ்க்கையின் சோதனைகளையும் இன்னல்களையும் நாம் எதிர்கொண்டு வெற்றிகொள்ள வேண்டும். இதில் தவறினால் நம் வாழ்க்கை வீணாகிவிடும். வாழ்க்கை இடையூறுகள் நிறைந்தது. இந்த இடையூறுகளே இல்லாவிட்டால் வாழ்க்கைக்கு எந்த மதிப்பும் இருக்காது! (தெய்வீக அருளுரை, ஜூன் 01, 1991)
வறுமை என்பது ஒருவரின் உள்ளச்சமநிலைக்கு எந்த அளவுக்கு சவாலாக இருக்கிறதோ வளமையும் அதே அளவுக்கு இருக்கிறது. - பாபா