azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 21 May 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 21 May 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

The mind has an innate tendency to merge in whatever it contacts; it craves this. So, it is ever agitated and restless. Through constant practice and training, it can be directed towards “Om” and taught to merge with it. It is also naturally drawn towards sound. Hence it is compared to a serpent. The serpent has two crude qualities; its crooked gait and its tendency to bite all that comes its way. These two are also the characteristics of people. People also seek to hold and possess all that they set their eyes on. They also move crookedly. But the serpent has one praiseworthy trait. However poisonous and deadly be its nature, when strains of the charmer’s music are played, it spreads its hood and merges itself in the sweetness of that sound, forgetting everything else. Similarly, through practice, people also can merge themselves in the bliss of Om. This close attention to sound (shabda) is a principal way to realise the highest Atma, who is “the Om of the Vedas”. (Gita Vahini, Ch XII)
Of all mantras, the Om (pranava) is the highest and the best. It is the very head and crown of all of them. – BABA
மனம் எதைப் பார்த்தாலும் அவையனைத்தையும் வேண்டுமெனக் கேட்கும். ஒவ்வொன்றுக்கும் ஆசைப்படுவதே அதன் வேலை; எனவே அது எப்போதும் குழம்பியும் அமைதியற்றும் இருக்கிறது. ஆனால், இடையறாத பயிற்சியின் மூலம் இதனை ‘ஓம்’ எனும் ப்ரணவ மந்திரத்துடன் லயிக்கச் செய்ய முடியும். மனம் இயற்கையாகவே ஒலியின்பால் ஈர்க்கப்படுகிறது; எனவே அதை ஒரு பாம்புடன் ஒப்பிடலாம். பாம்பிற்கு இரண்டு ஒழுங்கற்ற குணங்கள் உள்ளன: ஒன்று, வளைந்து நெளிந்து செல்லும் தன்மை; மற்றொன்று, தனது வழியில் வரும் அனைத்தையும் கொத்தும் குணம். இவையிரண்டும் மனிதர்களிடம் கூட மிகத்தெளிவாகக் காணப்படுகிறது மனிதர்களும் அவற்றைப் போன்றே தங்கள் பார்வையில் தென்படும் அனைத்தையும் சொந்தமாக்கிக் கொள்ள விழைகிறார்கள்; மேலும் அவர்கள் நேர்வழியிலும் செல்வதில்லை. ஆனால் பாம்பிடம் மெச்சத்தக்க ஒரு சுபாவம் உள்ளது. அது எவ்வளவு விஷமுள்ளதாகவும் கொடியதாகவும் இருந்தாலும் கூட, மகுடி வாசித்தால் அது ஆனந்தமாக படம் எடுத்து ஆடி, மெய்மறந்த நிலையில் அந்த ஸ்வரத்தில் லயித்துவிடும். அதைப் போலவே, மனிதர்களும், பயிற்சியின் மூலம் ப்ரணவ ஆனந்தத்தில் ஆழ்ந்துவிட முடியும். ‘சப்த உபாசனை’, "வேதங்களின் ஓம்" என விளங்கும் மிக உயர்ந்த ஆத்மாவை அடைவதற்கான ஒரு பிரதான வழியாக உள்ளது. (கீதா வாஹினி,அத்தியாயம்-12)
எல்லா மந்திரங்களைக் காட்டிலும் ‘ஓம்' எனும் ப்ரணவமே மிக உன்னதமானதும், தலைசிறந்ததும் ஆகும். அவை அனைத்திற்கும் மணிமகுடமாகவும் விளங்குகிறது. - பாபா