azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 20 May 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 20 May 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

Many times in human history, Avatars (Divine Incarnations) have come and awakened man. But, the animal past and the demonic delusion drag him into the mire, where he foolishly revels in sensual, physical and transient trivialities. This is a splendid chance to fulfil your human existence. The Ananda (Bliss) that you hope to derive from kith and kin, from wealth and worldly fame, is but a pale shadow of the Ananda that resides in the spring of your heart, where God dwells. Try to contact that spring; go to the very source; be centred in the Atma or the God within. Few seek real Ananda; many are led away by the pseudo-ananda of the senses, the intellect and the mind. Real Ananda springs only from Truth. And Truth is the Dharma or duty of each to himself. Seek Truth, serve Truth, be Truth. Truth will reveal itself when the heart is saturated in Love. (Divine Discourse, July 1970)
True bliss flows from a pure and loving heart. Try to experience such bliss. All other forms of happiness are momentary. - BABA
மனித வரலாற்றில் பலமுறை தெய்வ அவதாரங்கள் தோன்றி மனிதனை விழிப்படையச் செய்துள்ளன. ஆனால், முற்பிறவிகளின் மிருக குணங்களும், அசுரத்தனமான மாயையும், அவனை சிற்றின்பம், உடல் மற்றும் தாற்காலிக அற்ப சுகங்கள் எனும் சேற்றிற்கு இழுத்துச் செல்வதால் அதில் அவன் மடத்தனமாக சிக்கிக்கொண்டு களிக்கிறான். அவதாரம் தோன்றியுள்ள இத்தருணம் நீங்கள் பிறந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான ஓர் மகத்தான வாய்ப்பாகும். உற்றார் உறவினர்களிடமிருந்தும், செல்வம் மற்றும் உலகப் புகழிலிருந்தும் நீங்கள் பெற விழையும் ஆனந்தம் என்பது, இறைவன் உறையும் உங்கள் இதய ஊற்றின் ஆனந்தத்துடன் ஒப்பிட்டால் மிக மிக அற்பமானது. அந்த ஊற்றினைத் தொடர்புகொள்ள முயலுங்கள்; மூலாதாரத்திற்கே செல்லுங்கள்; ஆத்மா அல்லது உள்ளுறையும் இறைவனை மையமாகக் கொண்டிருங்கள். உண்மையான ஆனந்தத்தை நாடுபவர்கள் ஒரு சிலரே; புலன்கள், புத்தி, மனம் ஆகியவற்றின் பொய்யான ஆனந்தத்தால் பலர் ஈர்க்கப்பட்டு விடுகிறார்கள். உண்மையான ஆனந்தம் சத்தியத்திலிருந்து மட்டுமே உருவாகிறது. மேலும் சத்தியம் என்பது ஒவ்வொருவருக்கும் உரிய தர்மம் அல்லது கடமையாகும். சத்தியத்தைத் தேடுங்கள், சத்தியத்திற்கு சேவை செய்யுங்கள், உண்மையாக இருங்கள். இதயம் ப்ரேமையால் நிறையும்போது சத்தியம் தானாகவே வெளிப்படும். (தெய்வீக அருளுரை,ஜூலை1970)
உண்மையான ஆனந்தம் தூய்மையான மற்றும் அன்பான இதயத்திலிருந்து பொங்கி வழிகிறது. அத்தகைய ஆனந்தத்தை அனுபவிக்க முயலுங்கள். மகிழ்ச்சியின் மற்ற எல்லா வடிவங்களும் தாற்காலிகமானவையே. - பாபா