azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 13 May 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 13 May 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

Saint Jayadeva rebuked men for not using the God-given tongue for chanting the sweet and sacred name of the Lord. The tongue should be engaged only in speaking the truth, in speaking sweetly and in consuming what is pleasant and wholesome for the body. Man degrades himself by consuming intoxicating drinks and non-vegetarian food and by indulging in smoking. These noxious habits affect the brain also. Saint Surdas lamented on the behaviour of people who would not listen to the hymns of praise of God with their God-given ears or gaze on the beauteous form of the Lord with their God-given sight. Persons going on the road should concentrate on the road and not allow their eyes to stray to the wall posters and shop windows. It is necessary that everyone should recognise the proper role of the sense organs and use them properly. (Divine Discourse, Oct 06, 1997)
Liberation is control of the senses. Unless one controls one's senses, liberation is not possible. - BABA
இறைவன் அருளிய நாக்கினை மதுரமான புனிதமான இறைவனின் திருநாமத்தை உச்சரிப்பதற்குப் பயன்படுத்தாத மனிதர்களை ஜெயதேவர் கண்டித்தார். சத்தியத்தைப் பேசுவதற்கும், இனிமையாகப் பேசுவதற்கும், உடலுக்கு நன்மை பயப்பவை மற்றும் ஆரோக்கியமானவற்றை உண்பதற்கும் மட்டுமே நாக்கினை பயன்படுத்த வேண்டும். மது அருந்துதல், அசைவ உணவை உண்ணுதல், புகை பிடித்தல் ஆகியவற்றால் மனிதன் தன்னைத் தானே தரம்தாழ்த்திக் கொள்கிறான். இத்தகைய தீங்கு விளைவிக்கும் பழக்கங்கள் மூளையையும் பாதிக்கின்றன. மனிதர்கள், இறைவன் அருளிய காதுகளால் அவனைப் போற்றிப் புகழும் பாடல்களைக் கேட்காமலோ அல்லது இறைவன் அருளிய கண்களால் அவனுடைய திவ்யமான வடிவத்தைப் பார்க்காமலோ இருக்கும் போக்கைக் குறித்து சூர்தாஸ் வருந்தினார். சாலையில் நடந்து செல்லும்போது சாலையின் மீது கவனம் செலுத்தவேண்டும்; சுவரொட்டிகள், கடைகள் ஆகியவற்றின் மீது தங்கள் பார்வையை செலுத்தக்கூடாது. அனைவரும் புலனுறுப்புகளின் பங்கை நன்கு அறிந்து அவற்றை முறையாகப் பயன்படுத்துவது அவசியம். (தெய்வீக அருளுரை, அக்டோபர் 06, 1997)
புலனடக்கமே மோட்சமாகும். ஒருவர் புலன்களைக் கட்டுப்படுத்தாத வரை மோட்சமென்பது சாத்தியமில்லை. - பாபா