azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 05 May 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 05 May 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

You must aim to achieve Nirvana or Liberation. Nirvana means experiencing bliss in the last moments of your life. Man doesn’t realise what he should seek and what to reject. Three things are required to be done in life. Do good to those who have done harm to you. Forget the harm done by others and also the good you have done to others. Forget what needs to be forgotten and remember only those that require to be remembered. What should you remember? The good others have done to you! You must remember the good done to you as sacred and you must express your gratitude to them. Make all your actions conform to righteousness. Whatever actions you do remembering God, will get sanctified! See no evil; See what is good. Hear no evil; Hear what is good. Speak no evil; Speak what is good. Think no evil; Think what is good. Do no evil; Do what is good. This is the way to God. This is the essence of Buddha's teachings. (Divine Discourse, May 11, 1998)
Buddha prescribed five duties: good vision, good thoughts, listening to good things, good speech, and good actions. These five-fold duties constitute true Sadhana! - Baba
நீங்கள் நிர்வாண நிலை அல்லது மோட்சத்தை அடைய முயற்சிக்க வேண்டும். நிர்வாண நிலை என்பது உங்கள் வாழ்க்கையின் இறுதித் தருணங்களில் பேரானந்தத்தை அனுபவிப்பதாகும். எதை நாட வேண்டும், எதை நிராகரிக்க வேண்டும் என்பதை மனிதன் உணரவில்லை. வாழ்க்கையில் மூன்று விஷயங்களைச் செய்ய வேண்டும். உங்களுக்குத் தீங்கு செய்தவர்களுக்கு நன்மை செய்யுங்கள். பிறர் செய்த தீமையையும், பிறருக்கு நீங்கள் செய்த நன்மையையும் மறந்துவிடுங்கள். மறக்க வேண்டியதை மறந்துவிட்டு, நினைவில் கொள்ள வேண்டியதை மட்டும் நினைவில் வையுங்கள். நீங்கள் எதை நினைவில் கொள்ள வேண்டும்? மற்றவர்கள் உங்களுக்கு செய்த நன்மைகளை! உங்களுக்குச் செய்த நன்மையை புனிதமானதாகக் கருதி, அவர்களுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும். உங்கள் செயல்கள் அனைத்தையும் தர்மநெறிப்படிச் செய்யுங்கள். இறைவனை நினைந்து செய்யும் செயல்கள் அனைத்தும் புனிதமடைகின்றன! தீயதைப் பார்க்காதீர்கள், நல்லதையே பாருங்கள்; தீயதைக் கேட்காதீர்கள், நல்லதையே கேளுங்கள்; தீயதைப் பேசாதீர்கள், நல்லதையே பேசுங்கள்; தீயதை நினைக்காதீர்கள், நல்லதையே நினையுங்கள்; தீயதைச் செய்யாதீர்கள்; நல்லதையே செய்யுங்கள். இதுவே இறைவனை அடைவதற்கான வழியாகும். இதுதான் புத்தருடைய போதனைகளின் சாராம்சம் ஆகும். (தெய்வீக அருளுரை,மே11, 1998)
புத்தர் ஐந்து கடமைகளை அறிவுறுத்தினார்: நல்ல பார்வை, நல்ல எண்ணங்கள், நல்ல விஷயங்களைக் கேட்பது, நல்ல பேச்சு மற்றும் நல்ல செயல்கள். இந்த ஐந்து விதமான கடமைகளைக் கொண்டதுதான் உண்மையான ஆன்மிக சாதனையாகும். - பாபா