azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 28 Apr 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 28 Apr 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

Spiritual progress and bliss depend on disciplined effort. It can come only through hard and difficult toil, not through pleasant easy paths. Life becomes worth living only when one has disciplined habits, concentration of mind, renunciation of sensual pleasures and faith in the Atma (the Self). Discipline and concentration are like the embankments which control and direct the flood waters of a river into harmless and fruitful channels. You are engaged in sadhana and the inquiry into the Self and, in this great task, these two will be of great help. No one ignorant of the path can reach the goal; no one unaware of the goal can choose the path and tread it. You must have the proper conception of the path, as well as its destination before you decide on the journey. (Divine Discourse, Nov 20, 1970)
Love should direct you Godward in every action that you do. There is no greater path or goal than this. - Baba
ஆன்மிக முன்னேற்றமும் ஆனந்தமும் ஒழுக்கமான முயற்சியைப் பொறுத்தே இருக்கிறது. இது கடினமான, கஷ்டமான உழைப்பினால் மட்டுமே வருமே தவிர, சுகமான, சுலபமான வழிகளில் அல்ல. ஒழுக்கமான பழக்கவழக்கங்கள், ஒருமுகப்படுத்தப்பட்ட மனம், புலனின்பங்கள் மீது பற்றின்மை, ஆத்ம விசுவாசம் ஆகியவை ஒருவருக்கு இருந்தால் மட்டுமே வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும். ஆற்றின் வெள்ள நீரைக் கட்டுப்படுத்தி, பாதிப்பில்லாமல் பயனுள்ள வகையில் கால்வாய்களின் வழியே பாய்ச்சக் கூடிய கரைகள் போன்று ஒழுக்கமும் மனக்குவிப்பும் விளங்குகின்றன. நீங்கள் ஆன்மிக சாதனை, ஆத்ம விசாரம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளதால், இவை இரண்டும் இந்தப் பெரும் பணியில் பேருதவியாக இருக்கும்! செல்லும் பாதையைப் பற்றி அறியாதவன் இலக்கை அடைய முடியாது; அடைய வேண்டிய இலக்கை அறியாதவனோ அதற்கேற்ற பாதையை தெரிந்தெடுத்துச் செல்ல முடியாது. எனவே பயணத்தைத் தொடங்குவதற்கு முன், செல்லும் பாதையைப் பற்றியும் அடைய வேண்டிய இலக்கைப் பற்றியும் நன்கு அறிந்திருக்க வேண்டும். (தெய்வீக அருளுரை, நவம்பர்20, 1970)
அன்புடன் நீங்கள் ஆற்றும் ஒவ்வொரு செயலும் உங்களை இறைவனை நோக்கி இட்டுச்செல்ல வேண்டும். இதைவிட சிறந்த பாதையோ குறிக்கோளோ கிடையாது. - பாபா