azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 21 Apr 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 21 Apr 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

Today speeches are made on Truth, Righteousness, Peace and Love, and exhibitions are organised to propagate values. But there is no attempt to exemplify these values in practical living. Of what avail are speeches and exhibitions if values are not practised? The world will not be reformed by propaganda. It is only when there are living examples of these ideals that they become meaningful and inspiring. All the chaos in the world is due to the fact that people lead double lives. They say one thing and act differently. There should be unity in thought, word and deed. True spirituality consists in promoting human unity through harmonious living and sharing joy with one and all. Bhajans and all forms of worship are only good actions but are spiritually unimportant. Devotion consists in expressing love towards all. You cannot effect a change of heart through speeches. They often lead to confusion and conflict. Better than speeches is the practice of love, with faith in the Divine. (Divine Discourse, Mar 24, 1989)
By believing in God and yet ignoring God’s utterances and commands, you are contradicting yourselves. - Baba
இன்று சத்தியம், தர்மம், சாந்தி, ப்ரேமை ஆகியவற்றைப் பற்றி உரையாற்றப்பட்டு, அந்த விழுமியங்களைப் பரப்புவதற்காகக் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. ஆனால் நடைமுறை வாழ்வில் இந்த விழுமியங்களை எடுத்துக்காட்ட எந்த முயற்சியும் இல்லை. இந்த விழுமியங்களைக் கடைப்பிடிக்காவிட்டால் உரைகளாலும் கண்காட்சிகளாலும் என்ன பயன்? பிரச்சாரத்தால் உலகை சீர்திருத்த முடியாது. இந்த இலட்சியங்களின்படி வாழ்ந்து காட்டி முன்னுதாரணமாகத் திகழ்வோர் இருக்கும்போது தான் அவை அர்த்தமுள்ளதாகவும், உத்வேகமளிப்பதாகவும் இருக்கும். உலகில் உள்ள அனைத்து குழப்பங்களுக்கும் காரணம் மனிதர்கள் இரட்டை வாழ்க்கை வாழ்வதால் தான். அவர்கள் சொல்வது ஒன்றும், செய்வது அதற்கு மாறாகவும் இருக்கிறது. சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றில் இசைவு இருக்க வேண்டும். மனித ஒற்றுமையை இசைவான வாழ்வின் மூலம் ஊக்குவிப்பதிலும், அனைவருடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதிலும் தான் உண்மையான ஆன்மிகம் இருக்கிறது. பஜனைகளும் அனைத்து வழிபாட்டு முறைகளும் நற்செயல்கள் தானே தவிர ஆன்மிக ரீதியில் முக்கியமற்றவை. அனைவரிடமும் அன்பு செலுத்துவதில்தான் பக்தி உள்ளது. பேச்சின் மூலம் மனமாற்றத்தை ஏற்படுத்த முடியாது. அவை பெரும்பாலும் குழப்பத்திற்கும் முரண்பாட்டிற்கும் வழிவகுக்கும். பேச்சுக்களை விட இறைநம்பிக்கையுடன் அன்பைக் கடைப்பிடிப்பது சிறந்ததாகும். (தெய்வீக அருளுரை, மார்ச் 24, 1989)
இறைவனை நம்புவது, அதே சமயம் அவனுடைய வார்த்தைகளையும், கட்டளைகளையும் புறக்கணிப்பது இது உங்களுக்கு நீங்களே முரண்படுகிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. - பாபா