azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 19 Apr 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 19 Apr 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

The Lord does not insist on all men following one path and accepting one discipline. There are many doors to His mansion. The main entrance is, however, moha-kshaya (overcoming attachment). This is what Krishna exhorted Arjuna to achieve. Arjuna lost heart and allowed the bow to slip from his hand because he was overwhelmed by a deluding type of attachment. Krishna had to demonstrate to him that the kinsmen whom he dreaded to kill, teachers whom he wished to live, those whom he loved and hated, all were but instruments of His Will, puppets pulled by His Hand! This destroyed his attachment and he resumed his task, without any attachment to the consequences. That made him the recipient of the greatest lesson in history. This lesson is valuable for the theist as well as the atheist, for both have attachment to the consequences of their tasks, an attachment which will colour their eagerness and double the distress when disappointed. (Divine Discourse, Mar 28, 1967)
You cannot comprehend the Divine without giving up attachment to forms. You cannot be the Seer without giving up the seen. - Baba
அனைவரும் ஒரே மார்க்கத்தைப் பின்பற்றி, ஒரே சித்தாந்தத்தைத் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என இறைவன் வலியுறுத்துவதில்லை. அவனது மாளிகைக்கு பல நுழைவாயில்கள் உண்டு. ஆனால், முக்கியமான நுழைவாயில் ‘மோஹ-க்ஷயம்’, அதாவது பற்றுதலை அழிப்பதே ஆகும். இந்நிலையைத் தான் அர்ஜுனன் அடைய வேண்டுமென கிருஷ்ணர் அறிவுறுத்தினார். அர்ஜுனன், பற்றுதல் எனும் மாயைக்கு ஆட்பட்டதால் மனச்சோர்வடைந்து, தன்னிடமிருந்த வில் கைநழுவிப் போகச் செய்தான். அர்ஜுனன் கொல்வதற்கு அஞ்சிய உறவினர்கள், வாழ வேண்டுமென அவன் விரும்பிய குருமார்கள், அவனால் நேசிக்கப்பட்டோர், வெறுக்கப்பட்டோர் ஆகிய அனைவரும் இறைவனது ஸங்கல்பத்தின் கருவிகளே, அவனால் ஆட்டுவிக்கப்படும் கைப்பாவைகளே அன்றி வேறில்லை என்பதை அவனுக்கு கிருஷ்ணர் எடுத்துக் காட்ட வேண்டியிருந்தது. இது அவனுடைய பற்றுதலை அழித்தது; விளைவுகளின் மீது எந்தப் பற்றுதலும் இன்றி தனது பணியை மீண்டும் தொடர்ந்தான். அதுவே, அர்ஜுனனை வரலாற்றிலேயே மகத்தான போதனையான கீதையைப் பெற வைத்தது. இந்த போதனை ஆஸ்திகருக்கு மட்டுமல்லாது நாஸ்திகருக்கும் முக்கியமானதாகும்; ஏனெனில், இருவருமே தங்களது பணிகளின் விளைவுகளின் மீது பற்றுதல் கொண்டவர்கள்; இந்தப் பற்றுதல் அவர்களது ஆர்வத்தை திசை திருப்பி, அவர்கள் ஏமாற்றமடையும்போது துன்பத்தை இரட்டிப்பாக்கி விடுகிறது. (தெய்வீக அருளுரை, மார்ச் 28, 1967)
நீங்கள் ரூபங்களின் மீதான பற்றுதலை விடாமல் இறைவனை அறிய இயலாது. காணப்படுவதன் மீதான பற்றை விடாமல், நீங்கள் தான் காண்பவரான ஆத்மா என்பதை உணர முடியாது. - பாபா