azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 17 Apr 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 17 Apr 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

It is not for God to tell you what’s good and bad. Your own thoughts and feelings tell you what’s good and bad. If you eat cucumber, you will get the belch of cucumber. What is in you will be reflected outside! Whatever bad you see in others, it is but a reflection of your own thoughts. Some people are constantly immersed in worldly thoughts. Such people can never be happy. Only those whose mind is steady and thought-free, attain the state of bliss! Some people consider themselves very intelligent and keep enquiring deeply into their accumulated bookish knowledge. This type of pedantry is like an allergy. Once this allergy starts spreading, their energy is sapped! Unfortunately, today we are developing allergy, not energy! Do not keep deliberating whether something is good for you or not. Everything is good. Whatever happens, consider that it’s good for you. When you develop such an attitude, everything will turn out to be good for you. (Divine Discourse, Apr 07, 2006)
Lokavancha (worldly desires) takes you away from Lokesha (the Lord of all the Worlds). - Baba
எது நல்லது கெட்டது என்று இறைவன் உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்பதல்ல. உங்களுடைய சிந்தனைகளும் உணர்வுகளும் உங்களுக்கு எது நல்லது கெட்டது என்று சொல்லிவிடும். நீங்கள் வெள்ளரிக்காயைச் சாப்பிட்டால், உங்களுக்கு வெள்ளரிக்காயின் ஏப்பம் தான் வரும். உங்கள் அகத்தில் இருப்பதுதான் புறத்தில் பிரதிபலிக்கிறது! மற்றவர்களிடம் நீங்கள் காணும் தீயவை, உங்களுடைய சிந்தனைகளின் பிரதிபலிப்பே அன்றி வேறில்லை. சில மனிதர்கள் இடையறாது உலக சிந்தனைகளிலேயே மூழ்கி இருப்பார்கள். அத்தகையவர்கள் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. எவருடைய மனம் நிலையாகவும், சிந்தனையற்றதாகவும் இருக்கிறதோ, அவர்களே பேரானந்த நிலையை அடைகிறார்கள்! சிலர் தங்களை மகாமேதாவிகள் என்று கருதி தங்களின் புத்தக அறிவைப் பற்றி ஆழ்ந்து ஆராய்ச்சி செய்துகொண்டே இருப்பார்கள். இவ்வாறு மேதாவித்தனத்தைக் காட்டிக்கொள்வது ஒருவிதமான ALLERGY - ஒவ்வாமை போன்றது. இந்த ALLERGY பரவ ஆரம்பித்தவுடன், அவர்களின் சக்தி - ENERGY குறைந்துவிடுகிறது! துரதிர்ஷ்டவசமாக, இன்று நாம் ALLERGYஐ வளர்த்துக் கொள்ளுகிறோமே தவிர ENERGYஐ அல்ல! உங்களுக்கு நல்லதா இல்லையா என்று ஏதாவது ஒன்றைப் பற்றி யோசித்துக்கொண்டே இருக்காதீர்கள். எல்லாம் நல்லதே. எது நடந்தாலும் அது உங்கள் நன்மைக்கே என்று கருதுங்கள். அத்தகைய மனப்பான்மையை நீங்கள் வளர்த்துக் கொள்ளும்போது உங்களுக்கு எல்லாம் நல்லதாகவே அமையும். (தெய்வீக அருளுரை, ஏப்ரல் 07, 2006)
உலகத்தின் ஆசைகள் (லோக வாஞ்சைகள்) உங்களை உலகத்தின் ஈசனிடமிருந்து (லோகேசன்) விலக்கி வைத்து விடுகிறது. - பாபா