azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 14 Apr 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 14 Apr 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

Embodiments of Love! New Year does not bring new principles of truth and righteousness. They are changeless and eternal. When they are practised, the whole world will be taken care of. Hence, we have to always keep in mind these two principles. For man, truth and righteousness are his two eyes. In fact, they are his very life principles. He may undertake any activity, he may do any job or business, but he should make truth and righteousness the undercurrent of all his endeavours. Man has to take a newer path. Years have rolled by, but man has not given up his old and mean feelings. He has to purify his heart. Humanness will blossom only when there is transformation of the heart. Merely putting on new clothes is not enough, man has to change his character and behaviour. His conduct should be based on truth and righteousness. (Divine Discourse, Apr 14, 2003)
If you win the grace of God, you can overcome any obstacle and acquire any type of wealth. - Baba
ப்ரேமையின் திருவுருவங்களே! புத்தாண்டு, சத்ய தர்ம தத்துவங்களைப் புதிதாகக் கொண்டு வருவதில்லை. அவை மாறாதவை மற்றும் சாஸ்வதமானவை. அவை கடைப்பிடிக்கப்பட்டால் உலகம் முழுதும் நலம் பெறும். எனவே, நாம் இந்த இரண்டு தத்துவங்களையும் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும். சத்யமும் தர்மமும் மனிதனுக்கு இரண்டு கண்கள் போன்றவை. உண்மையில், அவை அவனது உயிராகும். அவன் எந்தப் பணியையும் மேற்கொள்ளலாம்; அவன் எந்த வேலையையும் அல்லது வியாபாரத்தையும் செய்யலாம்; ஆனால், அவன் தனது அனைத்து முயற்சிகளுக்கும் சத்யம் மற்றும் தர்மத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். மனிதன் ஒரு புதிய பாதையில் செல்ல வேண்டும். வருடங்கள் உருண்டோடி விட்டன, ஆனால் மனிதன் தனது பழைய இழிவான உணர்வுகளை இன்னும் விடவில்லை. அவன் தனது இதயத்தை பரிசுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். இதயம் நல்மாற்றம் அடைந்தால் மட்டுமே மனிதத்தன்மை மலரும். வெறும் புத்தாடைகளை அணிந்து கொண்டால் மட்டும் போதாது; மனிதன் தனது குணநலனையும் நடத்தையையும் மாற்றிக் கொள்ள வேண்டும். அவனது நடத்தை, சத்யம் மற்றும் தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும். (தெய்வீக அருளுரை, ஏப்ரல் 14, 2003)
நீங்கள் இறையருளைப் பெற்றுவிட்டால், எந்தத் தடையையும் வெல்லலாம், எத்தகைய செல்வத்தையும் பெறலாம். - பாபா