azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 11 Apr 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 11 Apr 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

All people in this world love someone or the other. However, there are differences in such love. The one God is present in all bodies. ‘Love all Serve all’, since God is present in all human beings. There is no place in this universe where God is not present. God is present in the sky, in the water, in the sound and in the light. Thus, everything in this universe is the embodiment of Divinity. We forsake such omnipresent Divinity and worship God in the form of some idol in a temple. No doubt, you can worship those idols, nothing wrong in that. But, you must realise the truth that the same God in that idol is present in every human being, nay, in every living being. Consider yourself as God first, and then begin to see the same God in every living being. Your body is a temple. There is divine energy in that temple. (Divine Discourse, Jul 28, 2007)
When you practise the attitude that God is everywhere as the witness of every act of yours, and that God is in every being you meet and serve, then, you will certainly be rewarded by a Vision of the Lord. - Baba
இந்த உலகில் உள்ள அனைத்து மக்களும் யாரையாவது நேசிக்கத்தான் செய்கிறார்கள். இருப்பினும், அத்தகைய அன்பில் பல வித்தியாசங்கள் உள்ளன. ஒரே இறைவன்தான் அனைத்து தேகங்களிலும் இருக்கிறான். 'அனைவரையும் நேசி - அனைவருக்கும் சேவை செய்', ஏனெனில் இறைவன் எல்லா மனிதருள்ளும் இருக்கிறான். இந்தப் பிரபஞ்சத்தில் இறைவன் இல்லாத இடமே இல்லை. இறைவன் விண்ணிலும், தண்ணீரிலும், ஒலியிலும், ஒளியிலும் இருக்கிறான். எனவே, இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் தெய்வத்தின் திருவுருவமே. இப்படி எங்கும் நிறைந்திருக்கும் தெய்வத்தை நாம் மறந்துவிட்டு, கோயிலில் ஏதாவது சிலை வடிவில் இறைவனை வணங்குகிறோம். சந்தேகமே வேண்டாம், அந்தச் சிலைகளை நீங்கள் வணங்கலாம், அதில் தவறேதுமில்லை. ஆனால், அந்தச் சிலையில் உள்ள அதே இறைவன்தான் ஒவ்வொரு மனிதனிலும், ஏன், ஒவ்வொரு உயிரினத்திலும் இருக்கிறான் என்ற உண்மையை நீங்கள் உணர வேண்டும். முதலில் உங்களையே நீங்கள் இறைவனாகக் கருதுங்கள், பின்னர் ஒவ்வொரு உயிரினத்திலும் அதே இறைவனைக் காணத் தொடங்குங்கள். உங்கள் தேகமே ஒரு தேவாலயம் தான். அந்த ஆலயத்தில் தெய்வ சக்தி நிறைந்துள்ளது என்பதை அறியுங்கள். (தெய்வீக அருளுரை, ஜூலை 28, 2007)
உங்களின் ஒவ்வொரு செயலுக்கும் இறைவன் சாட்சியாக எல்லா இடங்களிலும் இருக்கின்றான்; மேலும் நீங்கள் சந்திக்கின்ற சேவையாற்றுகின்ற ஒவ்வொரு உயிரினத்திலும் அதே இறைவன்தான் இருக்கின்றான் என்ற மனப்பான்மையை கடைப்பிடிக்கும்போது, உங்களுக்கு இறைவனின் தரிசனம் தவறாமல் அருளப்படும். - பாபா