azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 09 Apr 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 09 Apr 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

Far more beneficial than honouring the great is the practice of loving them. Praise, glorification and eulogy raise them onto an unreachable pedestal. Love binds one heart to another. Gratitude for the inspiration and instruction received must bind the hearts in love. The heart of Jesus was pure and calm. Hence, it is honoured as sacred. We must make our hearts sacred so that either we merge in Jesus or Jesus merges in us. When we merge, it is called Bhakti (Devotion); to have Jesus awakened in us is the path of Jnana (Wisdom). Jesus was a messenger of God, but note this too - all of you are messengers of God. Jesus was not the only Son of God; you are all His children. Jesus and His Father are one. You and God are also one; you need to be aware of it. (Divine Discourse, Dec 25, 1982)
Jesus teaches infinite love and compassion. To resurrect love and compassion, you must kill jealousy and selfishness, and purify your hearts. - Baba
ஆன்றோர்களை மதிப்பதை விட அவர்களை நேசிக்கும் பழக்கம் எவ்வளவோ பயனுள்ளதாகும். புகழ்ச்சியும் பாராட்டும் அவர்களை எட்ட முடியாத நிலைக்கு உயர்த்திவிடும். ப்ரேமையே ஒரு இதயத்தை மற்றொரு இதயத்துடன் இணைக்கிறது. பெற்ற உத்வேகத்திற்கும் அறிவுரைக்கும் செலுத்தும் நன்றியுணர்வால் இதயங்கள் ப்ரேமையால் இணைய வேண்டும். இயேசுவின் இதயம் பரிசுத்தமாகவும் அமைதியாகவும் இருந்தது. எனவே இது புனிதமானதாகப் போற்றப்படுகிறது. நாம் இயேசுவோடு ஐக்கியமாக வேண்டும் அல்லது இயேசு நம்மில் ஐக்கியமாக வேண்டும்; அந்த அளவிற்கு நம் இதயங்களை நாம் புனிதமாக்கிக் கொள்ள வேண்டும். நாம் ஐக்கியமாகும் போது அது பக்தி மார்க்கம் என்று அழைக்கப்படுகிறது; இயேசுவை நம்மில் எழும்படிச் செய்வது ஞான மார்க்கமாகும். இயேசு இறைவனின் தூதர், ஆனால் இதையும் கவனியுங்கள் - நீங்கள் அனைவரும் இறைவனின் தூதர்களே. இயேசு மட்டுமே இறைவனின் மகன் அல்ல; நீங்கள் அனைவரும் அவருடைய குழந்தைகளே. இயேசுவும் அவருடைய பிதாவான இறைவனும் ஒருவரே. நீங்களும் இறைவனும் ஒன்றுதான் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். (தெய்வீக அருளுரை, டிசம்பர் 25, 1982)
எல்லையற்ற ப்ரேமையையும் இரக்கத்தையும் இயேசு போதிக்கிறார், ப்ரேமையையும் இரக்கத்தையும் உயிர்ப்பிப்பதற்கு நீங்கள் பொறாமையையும் கயநலத்தையும் அழித்து, உங்கள் இதயங்களைத் தூய்மைப்படுத்த வேண்டும். - பாபா