azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 26 Mar 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 26 Mar 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

Render your hearts cool with delight, share the delight with others, and adore God in this delectable form. When you go into the qualifications needed for seva, you will know that a pure heart, uncontaminated by conceit, greed, envy, hatred or competition is essential. What is also needed is faith in God, as the spring of vitality, virtue, and justice. Seva is the worship you offer to God in the heart of everyone. Do not ask another which state you belong to, or which caste or creed you profess. See your favourite form of God in that other person; as a matter of fact, he is not 'other' at all. It is His image, as much as you are. You are not helping some 'one individual'; you are adoring Me, in him. I am before you in that Form; so, what room is there for the ego in you to raise its hood? Duty is God; Work is worship. Even the tiniest work is a flower placed at the feet of God. (Divine Discourse, Mar 04, 1970)
The best way to love God is to love all and serve all. - Baba
உங்களுடைய இதயங்களை மகிழ்ச்சியால் குளிரச்செய்து, அந்த மகிழ்ச்சியைப் பிறருடன் பகிர்ந்துகொண்டு, இறைவனை இந்த இனிமையான ரூபத்தில் ஆராதனை செய்யுங்கள். சேவை ஆற்றுவதற்கான தகுதிகள் யாவை என நீங்கள் ஆராயும்போது, வன்மம், பேராசை, பொறாமை, த்வேஷம் அல்லது போட்டி மனப்பான்மை ஆகியவற்றால் களங்கப்படாத, தூய இதயமே அத்தியாவசியமாகும் என்பதைத் தெரிந்து கொள்வீர்கள். இதனுடன் கூடவே, உற்சாகம், நற்பண்பு, நீதி ஆகியவற்றை ஊற்றாகக் கொண்டிருக்கும் இறைநம்பிக்கையும் தேவை. சேவை என்பது ஒவ்வொருவரின் இதயத்தில் இருக்கும் இறைவனுக்கு நீங்கள் அர்ப்பணிக்கும் ஆராதனையே. நீங்கள் பிறரை, அவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், அல்லது எந்த சாதி அல்லது குலத்தைச் சார்ந்தவர்கள் என்றெல்லாம் கேட்காதீர்கள். அந்த ‘மற்றவரில்’ நீங்கள் உங்களுடைய இஷ்டதெய்வத்தின் ஸ்வரூபத்தைக் காணுங்கள்; உண்மையில் அவர் ‘மற்றவரே’ அல்ல. அவரும் உங்களைப் போலவே இறைவனுடைய ஸ்வரூபம். நீங்கள் யாரோ ‘ஒருவருக்கு’ உதவவில்லை; நீங்கள் அவர்களில் உள்ள என்னைத் தான் ஆராதனை செய்கிறீர்கள். நான் உங்கள் முன் அந்த ஸ்வரூபத்தில் இருக்கிறேன்; அப்படியிருக்க, உங்களுள் அகந்தை தலைதூக்குவதற்கு இடமேது? கடமையே கடவுள்; வேலையே வழிபாடு. ஒரு மிகச்சிறிய வேலைகூட இறைவனுடைய திருவடியில் அர்ப்பணிக்கப்படும் ஒரு மலரேயாகும். (தெய்வீக அருளுரை, மார்ச் 04, 1970)
அனைவரையும் நேசித்து, அனைவருக்கும் சேவையாற்றுவதே இறைவனை நேசிப்பதற்கான மிகச் சிறந்த வழியாகும். - பாபா