azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 20 Mar 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 20 Mar 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

Embodiments of Love! Human life is precious, noble and virtuous. It is a pity human beings do not realise this. The whole purpose and goal of human life is to know one's true nature. Forgetting one's true nature, man is caught up in worldly concerns and plunged in misery. The ancient sages indicated the path to be pursued for the redemption of mankind. They commended nine forms of worship, any one of which could confer bliss and redeem a man's life. To experience the proximity of the Divine the easiest path is Namasmarana, remembering constantly the name of the Lord. Sage Veda Vyasa declared that in this Kali Yuga there is nothing greater than chanting the name of Hari for realising God. It is the easiest path for one and all, scholar and illiterate, rich and poor. (Divine Discourse, Oct 03, 1996)
Using the body as an instrument, you should realise the indweller and propagate this truth to the world. - Baba
ப்ரேமையின் திருவுருவங்களே! மனிதப் பிறவி அரியது, மேன்மையானது, நற்பண்புகளுடையதாகும். இதை உணராமல் மனிதர்கள் இருப்பது பரிதாபத்திற்குரியது. மனித வாழ்க்கையின் முழுமையான நோக்கமும் இலக்கும் ஒருவர் தனது உண்மையான இயல்பைத் தெரிந்து கொள்வதே. தனது உண்மையான இயல்பை மறந்து, மனிதன் உலகியலான கவலைகளில் சிக்கி, துன்பத்தில் ஆழ்ந்துள்ளான். பண்டைய கால முனிவர்கள், மனிதகுலம் கடைத்தேறுவதற்குப் பின்பற்ற வேண்டிய பாதையைச் சுட்டிக் காட்டியுள்ளனர். அவர்கள் போற்றிய நவவித பக்திகளில் எதைப் பின்பற்றினாலும் அது ஆனந்தத்தை அளித்து மனிதனுடைய வாழ்க்கையைக் கடைத்தேற்றும். இறைவனின் திருநாமத்தை இடையறாது நினைந்திருக்கும் நாமஸ்மரணையே இறைவனின் சாந்நித்யத்தை அனுபவிப்பதற்கான எளிதான பாதையாகும். வேதவியாஸர், கலியுகத்தில் இறைவனை உணர்வதற்கு ஹரி நாமஸ்மரணையை விட மேலானது எதுவும் இல்லை எனக் கூறியுள்ளார். பண்டிதனோ, பாமரனோ, ஏழையோ, பணக்காரனோ, யாவருக்கும் எளிதான பாதை இதுவே. (தெய்வீக அருளுரை, அக்டோபர் 3, 1996)
உடலை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, நீங்கள் உள்ளுறையும் இறைவனை உணர்ந்து, இந்த சத்தியத்தை உலகத்திற்கு எடுத்துரைக்க வேண்டும். - பாபா