azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 14 Mar 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 14 Mar 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

A person who claims to have gone to the seashore and played with the waves must produce, as evidence, at least a pair of wet feet, isn’t it? So too, when you come to this sea of Satsanga (the company of the pious) and share the waves of bliss, the proof is in the eye becoming wet with weeping; in the heart that exults when another is happy. Even when you listen, gather the honey as the bee does when it visits the flowers. It was said that the world is becoming Sai-mayam (full of Sai), with the Sai-namam (name of Sai) on everyone’s lips. I want it to go deeper. I also don’t insist that it should be the name “Sai”. The world must become Paramatma-mayam (full of the Supreme), with any of the many names and forms of the Supreme on the lips of people and before their minds! It’s the same substance poured into different moulds. Like sugar dolls that children seek, cats, dogs, cows and horses, all are of the self-same sweetness; one child prefers this shape and this name; another one weeps for another doll! The same Divine being appears in different times and places, assuming different Names. (Divine Discourse, Feb 26, 1961)
He owns all names and will respond to any one of them. Picture Him in any form while meditating on him; He assumes that form while conferring Grace. - Baba
கடற்கரைக்குச் சென்று அலைகளுடன் விளையாடியதாகக் கூறும் ஒருவர், அதை நிரூபிப்பதற்கு குறைந்தது ஈரம்பட்ட பாதங்களையாவது காட்ட வேண்டும், இல்லையா? அதுபோல், இந்த பக்தர்கள் நிறைந்த சத்சங்கக் கடலுக்கு வந்து ஆனந்த அலைகளைப் பகிர்ந்து கொள்ளும்போது, ஆனந்தக் கண்ணீரால் நனைந்த கண்ணிலும், பிறர் மகிழ்ச்சியாக இருக்கும்போது அதைக் கண்டு குதூகலிக்கும் இதயத்திலும்தான் அதற்கான ஆதாரம் இருக்கிறது. தேனீ பூக்களிடம் செல்லும்போது தேனை மட்டும் சேகரிப்பது போல, நீங்கள் காதால் கேட்பவையிலிருந்து இனிமையானவற்றை மட்டும் ஏற்றுக்கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் உச்சரிக்கும் சாயி நாமத்தால் இவ்வுலகமே சாயிமயமாக ஆகிக் கொண்டிருக்கிறது என்று இங்கு கூறப்பட்டது. இவ்விஷயம் இன்னும் ஆழமாகச் செல்லவேண்டுமென நான் விரும்புகிறேன். உச்சரிப்பது “சாயி” என்ற நாமமாக மட்டுமே இருக்க வேண்டும் என்று நானும் வலியுறுத்தவில்லை. மக்கள், பரமாத்மாவின் பல நாமரூபங்களில் ஏதாவதொரு திருநாமத்தை நாவிலும், ஒரு ரூபத்தை மனதிலும் கொள்வதன் மூலம் உலகமே பரமாத்ம மயமாக ஆக வேண்டும்! ஒரே பொருள்தான் வெவ்வேறு அச்சுகளில் வார்க்கப்படுகிறது என்பதை அறிய வேண்டும். குழந்தைகள் விரும்பும் பூனைகள், நாய்கள், பசுக்கள், குதிரைகள் ஆகியவற்றின் ரூபத்தில் உள்ள சர்க்கரைப் பொம்மைகளைப் போல, அனைத்தும் ஒரேமாதிரியான இனிமையை உடையவையே; ஒரு குழந்தை இந்த ரூபத்தையும் நாமத்தையும் விரும்புகிறது; மற்றொன்று இன்னொரு பொம்மைக்காக அழுகிறது! ஒரே இறைவன்தான் வெவ்வேறு திருநாமங்களை ஏற்று, வெவ்வேறு காலங்களிலும் இடங்களிலும் தோன்றுகிறான். (தெய்வீக அருளுரை, பிப்ரவரி 26, 1961)
அனைத்து திருநாமங்களும் இறைவனுடையதே, அதில் எதைச்சொல்லி அழைத்தாலும் அவன் வருவான்; அவனைத் தியானிக்கும்போது எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் உருவகப்படுத்திக் கொள்ளுங்கள்; அவன் அந்த ரூபத்தை ஏற்று அருள்பாலிப்பான். - பாபா