azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 13 Mar 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 13 Mar 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

Accumulation of things, of scholarship or fame, can yield no good unless what is acquired is put to practical use for oneself and others. The wisdom to recognise that the body he believes is himself is only an instrument wielded by him has to dawn in man. That is the first step to higher spiritual consciousness. There is in every person the ever-free, ever-unattached, ever-pure Atma. That is the Brahman (Absolute Reality), the Cosmic Awareness, latent and patent in everyone. Yoga (Divine Communion) awakens when the world is viewed with glorious unconcern. This is the source of supreme Ananda (Divine Bliss). How can renunciation and non-attachment result in joy, it may be asked. Discard the sense of egotism while engaged in activity; discard, while experiencing any emotion or reaction, the feeling of being an enjoyer - then, one can be ever in joy. Then the Bhogi (enjoyer) is really a Yogi (spiritually advanced person). (Divine Discourse, Apr 21, 1983)
If the ego is eliminated in the performance of actions and attachment is renounced in the use of material objects, there will be no difference between Tyaga (renunciation) and Bhoga (enjoyment). - Baba
பொருட்கள், புலமை, புகழ் ஆகியவற்றைக் குவித்துக்கொண்டு, அவற்றை நடைமுறையில் தனக்கும் பிறருக்கும் பயன்படுத்தப்படாவிட்டால் எந்த நன்மையும் பயக்காது. தன்னை உடல்தான் என்று நம்பும் ஒருவன், அந்த உடல் அவன் பயன்படுத்தும் வெறும் கருவிதான் எனும் ஞானம் அவனுள் உதயமாக வேண்டும். அதுவே உயர்ந்த ஆன்ம உணர்வுக்கான முதல் படியாகும். ஒவ்வொருள்ளும் நித்ய, சுத்த, புத்த, முக்த, நிர்மல ஸ்வரூபமான ஆத்மா உள்ளது. அதுவே ஒவ்வொருவரிடமும் உள்ளும் புறமும் உறையும் பரப்ரம்மமாகும். உலகை ஆழ்ந்த பற்றின்மையுடன் நோக்கும்போது யோகம் விழித்தெழுகிறது. அதுவே பேரானந்தத்தின் ஊற்றாகும். பற்றின்மையும், தியாகமும் எவ்வாறு மகிழ்ச்சியை அளிக்க முடியும் என்று கேட்கக் கூடும். செயலில் ஈடுபடும்போது அகந்தையை விலக்குங்கள்; எந்த உணர்ச்சியையும் எதிர்வினையையும் அனுபவிக்கும்போது, அதை அனுபவிப்பது தான் என்ற உணர்வை விலக்குங்கள் – பிறகு, ஒருவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். பின்னர் போகியே உண்மையில் யோகி ஆகிவிடுகிறார். (தெய்வீக அருளுரை, ஏப்ரல் 21, 1983)
செயலாற்றும்போது அகந்தை இன்றியும், பொருட்களைப் பயன்படுத்தும்போது பற்றுதல் இன்றியும் இருந்தால், தியாகிக்கும் போகிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. - பாபா