azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 10 Mar 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 10 Mar 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

A stomachful of food, an eyeful of sleep, a home full of children's laughter - these, according to most people, are the highest levels of happiness. But this refers only to the interval between birth and death. What of the before and after? The body is something separate from you. You own it for some years and you feed it, foster it and struggle with it, to tame it to do your will. 'You' or the 'I' in the body is the 'Atma' which is One without a second. When identification with the body weakens, the effulgence of the Atma (divine Self) will be patent. Attachment to the body implies the accumulation and acquisition of things that cater to its needs and greed. Accumulation promotes exploitation; it cannot win grace. It has no limit; the thirst increases with each gulp. It always asks for more. (Divine Discourse, Apr 21, 1983)
The first step on the spiritual path is to keep body consciousness (Dehabhimanam) under check. - Baba
பெரும்பாலான மக்களின் கருத்துப்படி, வயிறார உணவு, ஆழ்ந்த உறக்கம், குழந்தைகளின் சிரிப்பொலி நிறைந்த வீடு ஆகியவையே மகிழ்ச்சியின் மிக உயர்ந்த நிலைகளாகக் கருதப்படுகிறது. ஆனால் இது பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட இடைவெளியை மட்டுமே குறிக்கிறது. அதற்கு முன்பும் பின்பும் உள்ள நிலை என்ன? உடல் என்பது உங்களிடமிருந்து வேறுபட்ட ஒன்றாகும். சில ஆண்டுகளே நீங்கள் அதை சொந்தம் கொண்டாடுகிறீர்கள்; அது உங்களுடைய விருப்பப்படி செயல்படுவதற்கு அதற்கு உணவளிக்கிறீர்கள், போஷிக்கிறீர்கள், அதனுடன் போராடுகிறீர்கள். உடலில் உள்ள 'நீ' அல்லது 'நான்' என்பது இரண்டற்ற ஒன்றான ‘ஆத்மா’ ஆகும். தான் உடலே என அடையாளம் காண்பது குறையும்போது ஆத்ம ஜோதி வெளிப்படும். உடல் பற்று என்பது அதன் தேவைகளையும் பேராசையையும் பூர்த்தி செய்யும் பொருட்களைக் குவித்து வைத்துக் கொள்வதே ஆகும். குவிப்பது என்பது சுரண்டுவதை ஊக்குவிக்கிறது; அதனால் அருளை வெல்ல முடியாது. அதற்கொரு அளவே இல்லை; பருகப் பருக அதன் தாகம் தணியாமல் அதிகரிக்கிறது. அது எப்போதும் மேன்மேலும் வேண்டுமெனக் கேட்டுக்கொண்டே இருக்கும். (தெய்வீக அருளுரை, ஏப்ரல் 21, 1983)
தேஹாபிமானம் எனும் உடல்பற்றைக் கட்டுக்குள் வைத்திருப்பதுதான் ஆன்மிகப் பாதையில் முதல் படியாகும். - பாபா