azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 01 Mar 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 01 Mar 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

Always enjoy the peace that is the result of the stoppage of all mental agitations. Do not allow the mind to run after this and that. Train it to keep quiet. Keep away and afar the mental reactions caused by contact with the external world. Then, you can become the very Being (Sat). That is the state of the sage or the state beyond the realm of the senses, where their decree does not run. That is the real self-realisation that is the goal of life. “Practice silence (mounam bhajasva),” it is said. But what is silence? Not simply keeping the mouth shut. It means getting beyond the influence of all the senses and getting established always in the consciousness of one’s own reality. Perpetual bliss is also perpetual peace. When the mind withdraws from the external world, the tongue also becomes silent; all senses follow suit - that is genuine silence! (Prasanthi Vahini, Ch 24)
Practise silence. That will save you from squabbles, idle thoughts, and factions. - Baba
மனக்குழப்பங்களைத் தடுத்து நிறுத்துவதனால் கிட்டும் சாந்தியை அனுபவியுங்கள். கண்ணுக்கு தெரியும் பொருட்களின் மீதெல்லாம் மனதை அலைய விடாதீர்கள். அதை அமைதியாக வைத்துக்கொள்ளப் பழகுங்கள். புற உலகத்தின் தாக்கத்தால் ஏற்படும் விளைவுகளிலிருந்து வெகுதூரம் விலகி இருங்கள். அப்போது, இந்திரியங்களுக்கு அப்பாற்பட்ட நிலையான 'சத்' எனும் பரப்பிரம்மமாக ஆகமுடியும். அதுவே உண்மையான சாட்சாத்காரம்; அதுவே வாழ்க்கையில் அடைய வேண்டிய இலக்கும் கூட. 'மௌனம் பஜஸ்வா', அதாவது மெளனமாக இருக்கப் பழகுங்கள். ஆனால், மௌனம் என்றால் என்ன? வெறுமனே வாய்மூடி மௌனியாக இருப்பதல்ல; புலன்களின் ஆதிக்கத்தைக் கடந்து, என்றும் மெய்யுணர்வு நிலையில் லயித்திருப்பதாகும். நிரந்தரமான ஆனந்தமே சாஸ்வதமான சாந்தியாகும். புறவுலகிலிருந்து மனம் தன்னை விலக்கிக்கொண்டவுடன், நாக்கு பேச்சற்று அமைதியாகிவிடுகிறது; அதைத் தொடர்ந்து புலன்களும் அமைதியாகிவிடுகின்றன. அதுவே உண்மையான மௌனம் ஆகும். (பிரசாந்தி வாஹினி, அத்தியாயம்-24)
மௌனத்தைக் கடைப்பிடியுங்கள். அது உங்களை சண்டை சச்சரவுகள், வேண்டாத சிந்தனைகள், கோஷ்டி பூசல்கள் ஆகியவற்றிலிருந்து காப்பாற்றும். - பாபா