azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 08 Feb 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 08 Feb 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

Devotion and wisdom are like the pair of bullocks for the cart. Both have to pull in unison. Each must keep pace with the other and help the other to drag the weight quicker. Wisdom has to help the increase of devotion; devotion has to contribute to the growth of wisdom. It is because of this mutual help, this collaboration, that the cowherd maids of Brindavan were able to attain liberation. Their devotion towards Lord Krishna also endowed them with the highest wisdom. Now, the essence of devotion as well as wisdom is peace, the highest type of peace, the supreme peace. Supreme peace (prasanthi) leads one on to the glory of spiritual effulgence (prakanti), and thence to the super effulgence of the highest revelation (param-jyothi). Wisdom is a concomitant of devotion, its component part. Love fixed on God is most beneficent. It produces the greatest good. It will not bind people to the earth. It will take them by the hand along the road to liberation. (Prema Vahini, Ch 27)
One who is nourished by the nectar of Bhakti will have no desire for anything else. - Baba
பக்தியும், ஞானமும், வண்டியில் பூட்டப்பட்ட இரட்டைக் காளைகளைப் போன்றதாகும். இரண்டும் ஒன்றை ஒன்று அனுசரித்து வண்டியின் பாரத்தை இழுத்துச் செல்ல வேண்டும். இதில் ஏதாவது ஒன்று இல்லையென்றாலும் வண்டி சீராக நகராது. ஞானம் பக்தியை அதிகரிக்கவும், பக்தி ஞானத்தை அதிகரிக்கவும் அனுகூலமாக இருக்கவும் வேண்டும். பக்திக்கு ஞானத்தின் உதவியும், ஞானத்திற்கு பக்தியின் உதவியும் இல்லையென்றால், பிருந்தாவனத்தின் கோபிகைகள், ஸ்ரீகிருஷ்ணரிடம் ப்ரேமையையும், பக்தியின் மூலம் மோக்ஷத்தையும் அடைந்திருக்க முடியுமா? பக்திக்கு ஞானமும், ஞானத்திற்கு பக்தியும், ஒன்றுக்கொன்று துணையாகவும், உதவிகரமாகவும் இருக்கிறது என்பதை மேற்கூறியவை தெளிவுபடுத்துகிறது. இந்த இரண்டின் சாரமே சாந்தி. அதுவே பிரசாந்தி, அதுவே பிரகாந்தி, அதுவே பரஞ்ஜோதி. ஞானம் பக்தியின் ஒரு அங்கமே, இதுவே ப்ரேமை. இறைவன்பால் கொள்ளும் ப்ரேமை சுபமானது. அது மனிதனை ப்ரபஞ்சத்தோடு பிணைக்காது. மாறாக, அது மோக்ஷத்திற்கு வழிகாட்டும். (பிரசாந்தி வாஹினி, அத்தியாயம்-27)
பக்தி ரசத்தால் போஷிக்கப்படுபவனுக்கு வேறு எதன் மீதும் ஆசை இருக்காது. - பாபா