azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 05 Feb 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 05 Feb 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

Through one’s heart and blood vessels, man’s life stream is beating. This beat will come to an end sometime. Truly birth is followed by death, and death again by birth, and so on. We should try and understand the secret of this life. Like a man who is swimming and moving forward in a river, we should also forget the experiences we had in the past and swim forward. Only if the swimmer throws back the water which is ahead of him will he move forward. If he does not throw back the water that is ahead of him, he will stay where he is. As in this analogy, only if man attempts to throw back the experience which he has lived through, will he be able to move forward. If one follows such a path, one will find that in man’s life there is no place for anger, no place for jealousy, and his life will move on pleasantly. (Summer Showers in Brindavan, 1977, Ch 17)
Remember the lessons from the clock – always move forward, leave the past behind. - Baba
ஒருவரின் இதயம் மற்றும் இரத்த நாளங்கள் வழியாக, அவரது உயிரோட்டம் துடித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் துடிப்பு எப்போதாவது முடிவுக்கு வந்துவிடும். உண்மையில் பிறப்பைத் தொடர்ந்து இறப்பு, மீண்டும் பிறப்பினால் இறப்பு என்று போய்க்கொண்டே இருக்கிறது. இந்த வாழ்க்கையின் ரகசியத்தை நாம் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். ஆற்றில் நீந்தி முன்னேறிச் செல்லும் மனிதனைப் போல நாமும் கடந்த கால அனுபவங்களை மறந்து முன்னோக்கி நீந்திச் செல்லவேண்டும். நீச்சலடிப்பவர் தனக்கு முன்னால் இருக்கும் தண்ணீரைப் பின்னால் தள்ளினால் தான் அவர் முன்னேறிச் செல்ல முடியும். தனக்கு முன்னால் இருக்கும் தண்ணீரைப் பின்னால் தள்ளாவிட்டால் அவர் இருக்கும் இடத்திலேயே இருப்பார். இந்த உதாரணத்தைப் போல, மனிதன் தான் வாழ்க்கையில் பெற்ற அனுபவத்தை பின்னால் தள்ளி ஒதுக்கிவிட முயன்றால் தான் அவன் முன்னேற முடியும். அத்தகைய வழியை மனிதன் பின்பற்றினால், வாழ்க்கையில் கோபத்திற்கு இடமிருக்காது, பொறாமைக்கு இடமிருக்காது, அவனது வாழ்க்கை இனிமையாக நகரும். (பிருந்தாவனில் கோடை மழை, 1977, அத்தியாயம் 17)
கடந்த காலத்தை பின்னால் விட்டுவிட்டு எப்போதும் முன்னோக்கிச் செல்ல வேண்டும்'எனும் கடிகாரத்தின் பாடத்தை நினைவில் கொள்ளுங்கள். - பாபா