azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 01 Feb 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 01 Feb 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

People create and develop in themselves an abounding variety of selfish habits and attitudes, causing great discontent for themselves. The impulse for all this comes from power complex, greed for accumulating authority, domination, and power; greed for things that can never be eternal and full. It’s impossible for anyone to attain them to the level of satiation. Omnipotence belongs only to the Lord of all. One might feel elated to become the master of arts, owner of all wealth, possessor of knowledge, or repository of all scriptures, but from whom did they acquire all these? One might even claim that one earned all this through their own efforts and toil. But surely someone gave it to them in some form or the other. None can gainsay this. The source from which all authority and power originates is the Lord of all. Ignoring that omnipotence, deluding oneself that the little power one has acquired is one’s own, is indeed selfishness, conceit, and pride (ahamkara). One who’s a genuine vehicle of power can be recognised by characteristics of truth, kindness, love, patience, forbearance and gratefulness. Wherever these reside, ego (ahamkara) cannot subsist! (Prema Vahini, Ch 15)
Ego is very dangerous and powerful. It will ruin your character. - Baba
மக்கள் தங்களுக்குள் பலவிதமான சுயநல பழக்கவழக்கங்களையும் மனப்பான்மைகளையும் உருவாக்கி வளர்த்துக் கொண்டு, அதன் மூலம் தங்களுக்குத் தாங்களே பெரும் அதிருப்தியை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இவை அனைத்திற்குமான உந்துதல் அதிகார வளாகம், ஆதிக்க அதிகாரங்களை குவிக்கும் பேராசை; ஒருபோதும் நித்தியமான மற்றும் முழுமையானதாக இருக்க முடியாத விஷயங்களின் மீதான பேராசை மூலமாக வருகிறது. தெவிட்டும் அளவிற்கு அவற்றை அடைவது எவராலும் இயலாது. "சர்வவல்லமை", சர்வேஸ்வரனுக்கு மட்டுமே உரியது. கலைகளில் தேர்ந்தவராக, எல்லா செல்வங்களுக்கும் சொந்தக்காரனாக, அறிவுக்கு உடைமையாளராக, அல்லது அனைத்து வேதங்களின் களஞ்சியமாகவோ ஆவதில் ஒருவர் பெருமகிழ்ச்சியடையலாம், ஆனால் இவை அனைத்தையும் அவர்கள் யாரிடமிருந்து பெற்றார்கள்? ஒருவர் தங்கள் சொந்த முயற்சி மற்றும் உழைப்பின் மூலம் இதையெல்லாம் சம்பாதித்ததாகக் கூட கூறலாம். ஆனால் இதை நிச்சயமாக யாரோ அவர்களுக்கு ஏதாவது ஒரு வடிவத்தில் கொடுத்தார்கள். இதை யாரும் மறுத்துக் கூற இயலாது. அனைத்து அதிகாரம் மற்றும் சக்தியையும் அருளும் ஆதார மூலம் சர்வேஸ்வரனே. அந்த சர்வ வல்லமையைப் புறக்கணித்து, தான் பெற்ற அற்பசொற்ப சக்தியை தனக்கே சொந்தமானது என்றெண்ணி தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வதே உண்மையில் சுயநலம், இறுமாப்பு மற்றும் செருக்கு (அஹங்காரம்) ஆகும். சக்தியின் உண்மையான வாகனமாக இருப்பவரின் அடையாளம் சத்யம், தயை, ப்ரேமை, பொறுமை, சகிப்புத்தன்மை, நன்றியுணர்வு ஆகிய சிறப்பியல்புகளே. இவை எங்கெல்லாம் வசிக்கின்றனவோ அங்கெல்லாம் அஹங்காரம் பிழைத்திருக்க இயலாது! (ப்ரேம வாஹினி, அத்தியாயம்-15)
அகங்காரம் மிகவும் அபாயகரமானது, சக்திவாய்ந்தது. அது உங்களுடைய நற்குணங்களை அழித்துவிடக்கூடியது. - பாபா