azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 19 Jan 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 19 Jan 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

God’s Name is as the effulgence of the rising Sun that scatters the darkness of delusion; it is as luminous, as universal, and as sacred. Don’t misuse that sacred name even for a second. Don’t let even a second pass without bringing that name to mind. Remember, the sweetness of that name when repeated by Prahlada overpowered the hearts of the demons who heard him; children of the demons repeated the name along with Prahlada, and, led by him, they began to sing and dance with joy, arming themselves with axes to defend their leader! The name of the Lord, which can transform the demonic character and purify it into nectar, is verily the heaven of peace for the world. To repeat that name without break, to love that form and that name with intensity, deserves to be called devotion. Devotion means the highest, and purest love directed toward the Lord. Anyone can attain this devotion. The door of the yoga of devotion is open to all. The only passport needed is the desire for liberation. That desire entitles everyone to their heritage! (Prasanthi Vahini, Ch 26)
If you constantly contemplate on and chant the divine name, that itself will purify your thoughts and feelings. - Baba
மாயை எனும் இருளைப் போக்கும் இறைவனின் திருநாமம், இரவின் இருளைச் சிதறடித்துப் போக்கும் சூரியோதயம் போன்று பிரகாசமானது, ஒளிமயமானது, உலகளாவியது, பவித்திரமானது. அப்படிப்பட்ட பவித்திரமான திருநாமத்தை ஒரு கணம் கூட வீணாக்கக்கூடாது. அந்தத் திருநாமத்தை நினைக்காமல் ஒரு கணம் கூடக் கழிக்கப்படக்கூடாது. பாருங்கள், பிரஹலாதன் உச்சரித்த நாமத்தின் இனிமை, அதை செவிமடுத்த அசுரர்களின் இதயங்களை அபரிமிதமாக ஆட்கொண்டது. அசுரபாலகர்களும் பிரஹலாதனுடன் சேர்ந்து விஷ்ணுநாமத்தை உச்சரித்து, அவனைப் பின்பற்றி, தங்களது தீய குணங்களை விடுத்து, தம்முடைய தலைவனைக் காத்திட கோடரிகளை ஏந்தியவர்களாய், ஆனந்தமாக நடனமாடத் தொடங்கினர். இப்படிப்பட்ட அசுர குணத்தையும் கூட அமிர்த ரசமாக மாற்றவல்ல பரமாத்ம நாமமே உலக அமைதிக்கான சொர்க்கமாகும். அப்படிப்பட்ட திருநாமத்தை எப்போதும் இடையறாது உச்சரித்து, அந்த நாமரூபத்தின் மீது அளவற்ற ப்ரேமையைப் பெருக்கிக் கொண்டு ஆனந்தப்படுவதே பக்தியாகும். பக்தி என்றால் இறைவன் மீது வைக்கப்படும் மிக உயர்ந்த, பரிசுத்தமான ப்ரேமையே. இந்த பக்தியை யார் வேண்டுமானாலும் பெற முடியும். பக்தியோகத்தின் கதவுகள் அனைவருக்கும் திறந்தே இருக்கிறது. மோக்ஷம் அடைய வேண்டும் என்ற விருப்பமே தேவையான ஒரே கடவுச் சீட்டு. அந்த ஒரு விருப்பம் மோக்ஷம் அடைவதற்கான பாரம்பரிய உரிமையை ஒவ்வொருவருக்கும் அளிக்கிறது. (பிரசாந்தி வாஹினி, அத்தியாயம்-26)
நீங்கள் தொடர்ந்து இறைவனுடைய திருநாமத்தை ஆழ்ந்து ஸ்மரித்து வந்தால், அதுவே உங்களுடைய எண்ணங்களையும், உணர்வுகளையும் பரிசுத்தமாக்கி விடும். - பாபா